சூரியோதயம் இங்கு அழகானது.. ஓராயிரம் எண்ணம் உருவானது.!
பொன் காலை பொழுதொன்று எழுகின்றது.. புலர்கின்ற பொழுதெல்லாம் சுகமானது.!
குளிர்க்காற்று இதமாக வருடுமன்றோ.. பூந்தென்றல் சுரம்பாடி தழுவுமன்றோ!
இரைதேடிப் பறவைகள் பறக்குமன்றோ..
இதைக்காண இருக்கண்கள் போதாதன்றோ! எந்நாளும்.. அதிகாலை புலருமன்றோ!
செவ்வானம் வரைகின்ற ஒரு ஓவியம்..
சில்வண்டு தேன் தேடும் ஒரு காவியம்.. வெண் நாரை தவக்கோலம் புலர் காவியம்.. பொழுதாகும் போதிங்கு சூர்யோதயம்.! அதிகாலை நிலம் காணூம் ஒரு அதிசயம்!
*வே.கல்யாண்குமார்.*
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%