மனிதக் குரங்கு மனிதனாக மாறியது!
மனிதன் மனதில் குரங்கு ஔிந்து கொண்டது.!
பரிணாமத்தின் வளர்ச்சி என்றே உலகம் கருதியது.! பரம்பரை குணமே குரங்கு மனிதனாக மாறியது!
மனிதம் உடம்பு..
மனதுள் குரங்கு.. இதுதான் வாழ்க்கை நகர்கிறது.!
குடும்பமாக வாழும் குணத்தை குரங்கு அவனுக்கு வழங்கியது!
தாவும் மனதை தத்துவம் மூலம் மனிதம் ஆள முயல்கிறது..!
ஆசையில் மரத்தில் ஏறி.. கனிகளைக் கடித்துத் துப்பி வீசியது மனிதக் குரங்கு.!
நிலத்திலே உருண்டு புரண்டு.. தேடியே கிடைத்த பின்பு வீசியே எறிகிறது மனிதப் பண்பு
இரண்டும ஒன்றின் ஒன்றாய்.. இணைந்துதான் வாழ்வு இங்கே.. இதிலே.. எங்கே சொல் இறைவன் பங்கு.?
வே.கல்யாண்குமார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?