மழையால் சேதமான பயிர்களுக்கு ரூ.289.63 கோடி நிவாரணம்: வேளாண் துறை அமைச்சர் அறிவிப்பு

மழையால் சேதமான பயிர்களுக்கு ரூ.289.63 கோடி நிவாரணம்: வேளாண் துறை அமைச்சர் அறிவிப்பு


 

சென்னை: கனமழை​யால் பாதிக்​கப்​பட்ட பயிர்​களுக்கு நிவாரணம் வழங்க ரூ.289.63 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ள​தாக வேளாண் துறை அமைச்​சர் எம்​.ஆர்​.கே.பன்​னீர்​செல்​வம் அறி​வித்​துள்​ளார்.


இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: மழை​யால் பயிர்​கள் பாதிக்​கப்​பட்ட மாவட்​டங்​களில் வரு​வாய் மற்​றும் வேளாண்​மைத் துறை மூலம் கணக்​கெடுப்பு நடத்​தப்​பட்​டது.


அதில் 33 சதவீதத்​துக்​கும் மேலாக பாதிக்​கப்​பட்ட பரப்பை உறு​தி​செய்​து, அதற்​கேற்ப மாவட்ட ஆட்​சி​யர்​களிடம் இருந்து நிவாரணம் வேண்டி கருத்​துருக்​கள் பெறப்​பட்​டன. அதன்​படி, வேளாண் பயிர்​கள் 4.90 லட்​சம் ஏக்​கர், தோட்​டக்​கலைப் பயிர்​கள் 76,132 ஏக்​கர் என மொத்​தம் 5.66 லட்​சம் ஏக்​கர் பாதிக்​கப்​பட்​ட​தாக கணக்​கிடப்​பட்​டது.


இதற்கு நிவாரண​மாக மாநிலப் பேரிடர் நிவாரண நிதி​யில் இருந்து 3.60 லட்​சம் விவ​சா​யிகளுக்கு ரூ.289.63 கோடி ஒதுக்கி தற்​போது ஆணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது.


கனமழை​யால் பாதிக்​கப்​பட்ட 2.80 லட்​சம் வேளாண் பயிர் விவ​சா​யிகளுக்கு ரூ.254.38 கோடி​யும், பாதிக்​கப்​பட்ட 80,383 தோட்​டக்​கலைப் பயிர் விவ​சா​யிகளுக்கு ரூ.35.25 கோடி​யும் நிவாரணம் வழங்​கப்​படும்.


இந்த தொகை விவ​சா​யிகளின் வங்​கிக் கணக்​கில் நேரடி​யாக வரவு வைக்​கப்​படும். இவ்​வாறு அறி​விப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%