மாடியில் இருந்து கீழே குதித்து பெண் தற்கொலை

மாடியில் இருந்து கீழே குதித்து பெண் தற்கொலை



சென்னை, ஜன.  சென்னை பாலவாக்கத்தில் மாடியில் இருந்து கீழே குதித்து பெண் தற்கொலை செய்துக் கொண்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பாலவாக்கம் பல்கலை நகரை சேர்ந்தவர் வீரப்பன் (60). இவர் மனைவி அன்புக்கரசி (50). இவர்களுக்கு பாலகுரு என்ற மகன் உள்ளார். வீரப்பன், அம்பத்தூரில் உள்ள ஒரு டீக்கடையில் காசாளராக வேலை செய்து வருகிறார். பாலகுரு, பூந்தமல்லி அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. மூன்றாமாண்டு படிக்கிறார். வீரப்பன், படிப்பு தேவைக்ககாக அண்மையில் அன்புக்கரசி தங்கநகையை அடமானம் வைத்துள்ளார். இதன் பின்னர் அன்புக்கரசி மிகுந்த மன உளைச்சலுடனும், விரக்தியுடனும் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் அன்புக்கரசி, தாங்கள் வசிக்கும் மாடியில் இருந்து வெள்ளிக்கிழமை கீழே குதித்தார். இதில் பலத்தக் காயமடைந்த அன்புக்கரசி, சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இது குறித்து நீலாங்கரை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.  


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%