
மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை
விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.
மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள்
துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் இன்று (02.10.2025) திருவண்ணாமலை
மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட அலுவலக வளாகத்தில் மாவட்ட உள்
விளையாட்டு அரங்கத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான முதலமைச்சர்
கோப்பை விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்வில்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்,இஆப, அவர்கள்
உடனிருத்தார்.
மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை பள்ளி மாணவிகளுக்கான கைப்பந்து
போட்டி இன்றைய தினம் மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைத்துறை மற்றும்
சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்து போட்டிகளில் பங்கேற்கும்
வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள்.
மேலும் இப்போட்டிகள் இன்றைய தினம் முதல் 05.10.2025 வரையிலும், கல்லூரி
மாணவிகளுக்கான கைப்பந்து போட்டி 08.10.2025 முதல் 11.10.2025 வரையிலும்
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. இப்போட்டிகளில்
தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டத்தில் சேர்ந்த 646 மாணவியர்கள் கலந்து
கொள்கின்றனர். இப்போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு 12 இலட்சமும்,
இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 8 இலட்சமும் மற்றும் மூன்றாம் இடம் பிடிக்கும்
அணிக்கு 4 இலட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.
இந்நிகழ்வில் மாநில தடகள சங்கத் துணைத்தலைவர் திரு.எ.வ.வே.கம்பன்,
மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.இராம்பிரதீபன், விளையாட்டு மற்றும் இளைஞர்
நல அலுவலர் திருமதி.சண்முகப்பிரியா, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர்
திரு.ராஜ்குமார் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?