செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இறுதியில் தொடங்கும் இந்திய நாட்டிய விழா, கடற்கரை கோயில் வளாகத்தில் நாள்தோறும் மாலையில் தொடங்கி இரவு வரையில் என ஒருமாதம் நடைபெறும். இதில், நம் நாட்டின் இதில், பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான பரதநாட்டியம் மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், நாட்டுப்புற நடனங்கள் மற்றும் கதக்களி, குச்சுப்புடி, ஒடிசி, மோகினி ஆகிய நடனங்கள் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படும். இதனை, சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசிப்பது வழக்கம். இந்நிலையில், 2025-26ம் ஆண்டுக்கான நாட்டிய விழா மாமல்லபுரத்தில் ஞாயிறன்று (டிச.21) தொடங்கி, ஜனவரி 19ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இதற்காக, கடற்கரை கோயில் வளாகத்தில் மேடை மற்றும் அலங்கார விளக்குகள் அமைக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?