மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா
Sep 18 2025
39

தென்காசி மாவட்டம் பாட்டாகுறிச்சி விளையாட்டு வளாகத்தில் இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இன்று (18.09.2025) நடைபெற்ற மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர் இஆப., அவர்கள் தலைமையில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.ராணிஸ்ரீகுமார் அவர்கள், தென்காசி சட்டமன்ற உறுப்பினர்
திரு.எஸ்.பழனிநாடார் அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்த்
அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,
தென்காசி மாவட்டத்தின் சார்பாக மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் சுமார் 1000-ற்கும் மேற்பட்ட பள்ளி,
கல்லூரி மாணவ, மாணவிகள், பொது மக்கள், அரசு ஊழியர்கள் (ம) மாற்றுத்திறனாளிகள்
ஆகியோர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இப்போட்டியில்
வெற்றி பெற்றவர்களுக்கு முதற்பரிசாக ரூ.3000/- மும், இரண்டாம் பரிசாக ரூ.2000/- மும்,
மூன்றாம் பரிசாக ரூ.1000/-மும் வெற்றி பெற்றவர்களின் வங்கிக் கணக்கில்
செலுத்தப்பட்டது.
இவ்விழாவில், மாவட்ட விளையாட்டு (ம) இளைஞர் நலன் அலுவலர்
திரு.ராஜேஷ், தென்காசி நகர்மன்ற தலைவர் திரு.சாதிர், பாட்டாக்குறிச்சி துணை
பஞ்சாயத்துத் தலைவர் திரு. முருகேசன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.ஏ.எடிசன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், தென்காசி மாவட்டம்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?