அன்புடையீர்
வணக்கம் 18. 9 .25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர் முதல் பக்கத்தில் அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாத புதிய இந்தியா என்று நம் பாரத பிரதமர் மோடிஜி அவர்களின் பேச்சும் படமும் மிகவும் அருமை இன்றைய பஞ்சாங்கம் மிக நல்ல நாளாக அமைய எனக்கு உதவியது.
திருக்குறளை அதன் பொருள் புரிந்து கொண்டு படித்து மகிழ்ந்து மிகவும் அருமையாக இருந்தது. பாராட்டுக்கள். அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்த படமும் தகவல் மிகவும் அருமை .
நலம் தரும் மருத்துவம் பகுதியில் ஏப்பம் ஏன் வருகிறது அப்படி அடிக்கடி வருவதற்கு என்ன காரணம் என்று காரணத்தின் சொல்லி ஏப்பம் வராமல் இருக்க நல்ல வழிமுறைகளை சொல்லிக் கொடுத்தது மிகவும் அருமை பாராட்டுக்கள்.
கள்ளழகர் கோவில் உறியடி உற்சவ விழா என்ற படமும் செய்து மிகவும் அருமை பாராட்டுக்கள். 20 ஆண்டு பணியாற்றி விருப்ப ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு முழு ஓய்வூதிய பயன் கிடைக்கும் என்ற செய்தி மிகவும் அருமை பாராட்டுக்கள்.
தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் தெ. பொ. மீனாட்சிசுந்தரம் அவர்களின் வரலாறும் அவரைப் பற்றிய படமும் மிகவும் அருமை பாராட்டுக்கள் .
பல்சுவை களஞ்சியம் பகுதியில் வந்த ஜோக்ஸ் படிக்க படிக்க என்னை அறியாமல் பலமுறை சிரிக்க வைத்தது நினைத்து நினைத்து சிரித்து மகிழ வைத்தது. வாங்க சம்பாதிக்கலாம் என்று தொழில் செய்ய முனைவோருக்கு நல்ல அருமையான தகவல்களை சொன்னது பாராட்டுக்குரியது.
விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் என்ற படமும் செய்தியும் மிகவும் அருமை.
சுற்றுலா பக்கத்தில் வந்த பருவமழை காலத்தில் மழையேற்றம் செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயம் என்று நல்ல அருமையான தகவல்களை சொன்னது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். பாராட்டுக்கள். வடக்கிழக்கு பருவம் மழை எதிரொலி என்று நிவாரண பணி இயந்திரங்கள் தயார் நிலையில் இருப்பதாக செய்தி படித்தது மழை வரப்போகுதின் அறிகுறியை புரிந்து கொண்டேன் .
சென்னை உயர்நீதிமன்றத்தில் 3.68 லட்சம் வழக்குகள் தேக்கமாக உள்ளது அதிர்ச்சியான தகவலாக இருந்தது .
காலைத் தொட்டு வணங்காததால் ஆத்திரமடைந்து மாணவர்கள் அடித்த ஆசிரியை சஸ்பெண்ட் என்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தது குருவை காலை தொட்டு வணங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது தேவையில்லாதது.
ரஷ்ய எண்ணை வாங்குபவர்களுக்கு வரி ஜி 7 நோட்டோ நாடுகளுக்கு அமெரிக்கா கோரிக்கை வரி விதித்ததால் பதிலடி என்று சீனா எச்சரிக்கை செய்தது அயல்நாட்டு செய்திகளை மிக தெளிவாக சொன்னது பாராட்டுக்குரியது.
எல்லா பக்கத்திலும் நல்ல செய்திகளாக இருந்தது. ஆர்வமுடன் படித்து ரசித்தேன் மிக அருமையான தகவல்கள் மிகத் தெளிவாக கொடுக்கும் தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
நன்றி
உஷா முத்துராமன்