ஒரு நிமிடச் சிந்தனை

ஒரு நிமிடச் சிந்தனை


நீங்கள் உங்களை ஒரு நாவலாசிரியராக எண்ணிக்கொண்டால் உங்களுடைய மிகச் சிறந்த நாவலை எழுத ஆரம்பியுங்கள். சிறந்த பாடகராக எண்ணிக்கொண்டால் இன்றே அசுர சாதகத்தைத் துவக்குங்கள். பெரிய செல்வந்தனாக நினைத்துக் கொண்டால் அதைத் தேடும் முயற்சியில் இன்றே இறங்குங்கள். எண்ணியதை முடிக்க இப்போதே செயலில் இறங்குங்கள். இலக்கு ஒன்றைத் தீர்மானியுங்கள். அதையே லட்சியமாக்குங்கள். குதியுங்கள். குதிக்காமல் நீந்த முடியாது. சாத்தியங்கள் செயல் பாடுகளால்தான் சாதனைகளாக முடியும். சாத்தியங்கள் முழுமையாக வெளிப்படும் இடமே வாழ்க்கை வெளிச்சமாகும். அதுவே தன்னறம் எனப்படும். அதில் இறங்கிச் செயல்படவே நாம் படைக்கப் ப்பட்டுள்ளோம். ஒரு புல்லும் அதைத்தான் செய்கிறது. அது தன் முழு ஆற்றலாலும் இந்த பூமியை மூடப்பார்க்கிறது.

நாமு ம் வேடிக்கை மனிதர்கள் அல்லவே! 

சிந்திப்போம் சோம்பலை நீக்கி. 

செயலாற்றுவோம் வெற்றியை நோக்கி.


பாளை. கணபதி.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%