மிர்ச்சி அல்வா !

மிர்ச்சி அல்வா !



" ஏன்னா ! " பார்யாள் பங்கஜம் அழை

க்க சோஃபாவில் அமர்ந்தபடி பேப்பர் படித்துக்கொண்டிருந்த சீனிவாசன் திரும்பி ' என்ன ' என்பதுபோல்பார்த் தார்.


" எங்காத்துக்கு போயிட்டு வந்துட றேன். பனிரெண்டு மணிக்கு வந்து தளிகை பண்ணி போடறேன். பிரேக் ஃபாஸ்டுக்கு உங்க பிள்ளையாண்டா னுக்கு எட்டு இட்லி கட்டிக் கொடுத்தது போக பாக்கி நாலு இட்லி இருக்கு . அத வச்சு அடஜஸ்ட்?பண்ணிக் கோங்க !" என கூறிவிட்டு நடையைக் கட்டினாள் பங்கஜம்.


பிள்ளை ரகு தன் நண்பண் ஓருவனு டன் திருப்பதி போவதாகச் சொல்லி யிருந்தான். அதிகாலையில் எழுந்த பங்கஜம் குளித்துவிட்டு மட மடவெ ன்று ஸ்டவ் பற்றவைத்து குக்கரில் மூன்று தட்டில் இட்லி வைத்தாள். இட்லி வெந்ததும் நாலு நாலு இட்லி களாக இரண்டு பேப்பர் தட்டில் மிள காய்ப் பொடி தடவி வைத்தாள்.


அவற்றை எடுத்துக்கொண்ட ரகு தன்

பெற்றோரிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டபோது காலை மணி ஐந்து.


நாலரை மணிக்கு வேகவைத்த இட்லி

இப்போது எப்படியிருக்கும் ? ஆறி அவலாய் போயிருக்கும். தொட்டுக் கொள்ளசட்னி இருந்தாலாவது பர வாயில்லை. மிளகாய் பொடியை வைத்துக்கொண்டு சாப்பிடவே ண்டும்.


சீனுவாசனுக்கு இட்லி சாப்பிடும் ஆசையே விட்டுப் போச்சு ! ஆயினும் அவருக்கு பேசாமல் இட்லி உப்புமா பண்ணி சாப்பிட்டாலென்ன என்ற ஐடியா உதித்தது.


உடனே எழுந்தவர் கிச்சனுக்குள் நுழைந்தார். இட்லி குக்கரைத் திறந்து தட்டிலிருந்த நாலு இட்லிகளை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு கையால் நன்றாக பிசைந்து வைத்து க்கொண்டார்.


பிறகு ஸ்டவ்வை பற்றவைத்து வாண

லியை அதன்மீது வைத்து கொஞ்சம்

எண்ணையை ஊற்றினார். இதற்குள்

உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சிறி

தளவில் எடுத்து தயாராய் வைத்தவர்

அவற்றை காயும் எண்ணையில் போட்

டார். கூடவே கொஞ்சம் கடுகையும்

போட்டு நன்கு கரண்டியால் கிளற கடுகு வெடித்தது. பருப்பும் பொன்னி றமாக மாறியது.


மிளகாய்த்தூள் பாக்கெட்டைவாணலி

க்கு நேராகப் பிடித்து வாகாக சாய்க்க

சட்டென நிறையத் தூள் கொட்டி விட் டது.பார்க்க பயங்கர சிவப்பு நிறத்தில் இருந்தது வாணலியல் உள்ள கரை சல்.!


பாத்திரத்தில் வைத்திருந்த இட்லி துகள்களை வாணலியில் போட்டு கரண்டியால் கிண்டினார். நன்றாக கிண்டியதும் ஸ்டவ்வை அணை த்தவர், ஒரு ஸ்பூனைக் கொண்டு வாணலியில் உள்ள இட்லி உப்பு மாவில் கொஞ்சம் எடுத்து நன்றாக

ஊதி வாயில் போட்டுக்கொள்ள சுரீர்

என்று காரம் மண்டையில் உறை த்தது.


மூக்கில் தண்ணிர் வந்தது. இதை சாப்பிட்டால் நிச்சயம் வயிற்றுப் போக்கு ஏற்படும் அதே சமயம் பொருள் வேஸ்ட் ஆகவும் கூடாது, என்ன வழி என்று யோசனைசெய்த சீனுவாசனுக்கு ஒரு ஐடியா தோன்றி யது.


இன்னொரு வாணலியை ஸ்டவ் பற்ற

வைத்து அதன்மீது வைத்தார். நான்கு

மேஜைக்கரண்டி நெய்யை வாணலி யில் ஊற்றினார். நெய் காய்ந்ததும் ரெடியாக வைத்திருந்த முந்திரிப்ப ருப்பு மற்றும் ஏலக்காய் போட்டு கரண்டியால் கிண்டநன்கு சிவந்ததும் இட்லி உப்புமாவை எடுத்து அதில் போட்டு நன்றாக கிளறினார்.


நெய்யில் தள தளவென்று இட்லி உப்

புமா குதித்துக்கொண்டிருந்த நேரம்

இரண்டு டம்ளர் சர்க்கரையை அதில்

சேர்த்து மீண்டும் நன்கு கிளறினார்.

பிறகு ஸிம்மில் வைத்துவிட்டு ஒரு

தட்டைக்கொண்டு வாணலியை மூடிய

வர் ஹாலுக்குள் பிரவேசித்துகொஞ்ச

நேரம் ஆஸூவாசப்பட்டுக்கொண்டார்.


பத்து நிமிடம் கழிந்ததும் உள்ளேயிரு

ந்து ஒரு விநோதமான நெடிவர மீண்டும் கிச்சனுக்குள் நுழைந்து இடுக்கியால் தட்டை திறந்து பார்க்க வாணலியில் இருந்த வஸ்து அல்வா போல் கண் சிமிட்டியது ! 


சோர்ந்துபோயிருந்த சீனுவாசனின்

முகம் விரிந்தது ! ஸ்பூனினால் கொஞ் சம் அல்வாவை எடுத்து ஊதி வாயில் போட்டார். காரம் கொஞ்சம் குறைந் திருக்க சர்க்கரையால் இனிப்பு கூடியிருந்தது.


ஒரு புதுவிதமான அல்வா கிண்டிய சந்தோஷம் கலந்த திருப்தி ஏற்பட அதற்கு மிர்ச்சி அல்வா என்ற பெயர் இட்டார் சீனிவாசன்.

        ....................................................


வி.கே.லக்ஷ்மிநாராயணன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%