மீன்வளக் கல்லூரியில் முதல்ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு
Sep 18 2025
54

தூத்துக்குடி, செப். 19-
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. நடப்பு 2025- 2026-ம் கல்வி ஆண்டில் பொதுக் கலந்தாய்வு மூலமாக 51 புதிய மாணவர்கள் (21 ஆண்கள் மற்றும் 30 பெண்கள்) மீன்வளக் கல்லூரியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். புதிய மாணவர்களுக்கான வரவேற்பு நேற்று காலை கல்லூரி அரங்கத்தில் நடந்தது. மீன்வளக் கல்லூரி முதல்வர் (பொ) ஆதித்தன் தலைமை வகித்து அனைத்து மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களை வரவேற்று, கல்லூரி பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
2025 - 2026 ஆண்டு மாணவர்கள் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் ஜேக்குலின் பெரைரா கல்விமுறை விதிகள் பற்றியும், மாணவர்களுக்கான அரசு உதவித்தொகை பற்றியும் எடுத்துரைத்தார்.கல்லூரி மாணவர் விடுதியின் காப்பாளர் பேராசிரியர் இரா.ஷாலினி மாணவர் விடுதியின் சட்டத் திட்டங்கள் குறித்து விளக்கினார். கல்லூரி மாணவர் பேரவையின் துணைத்தலைவரான பேராசிரியர் பா.கணேசன் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வரும் கலை நிகழ்ச்சிகள் குறித்து எடுத்துக்கூறினார்.
அனைத்து புதிய மாணவர்களும், தங்கள் பெற்றோருடன் சேர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பெற்றோர்களின் கேள்விகளுக்கு பேராசிரியர்கள் பதிலளித்தனர். மாணவர் ஆலோசகர் பேராசிரியர் நடராஜன் நன்றி கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?