முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 69,711 மாணவர்கள் பயன்: செய்தியாளர் பயணத்தில் கலெக்டர் தினேஷ்குமார் தகவல்

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 69,711 மாணவர்கள் பயன்: செய்தியாளர் பயணத்தில் கலெக்டர் தினேஷ்குமார் தகவல்




கிருஷ்ணகிரி, அக். 11–


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 1,447 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 69,711 மாணவர்களுக்கு பலனளித்து வருகிறது என்று கலெக்டர் தினேஷ் குமார் தெரிவித்தார்.


கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், பையனப்பள்ளி ஊராட்சி மற்றும் சிப்பாயூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உணவு வழங்கும் பணிகளை கலெக்டர் தினேஷ் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


அப்போது அவர் கூறியதாவது, பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் காலையிலேயே பயணம் செய்யவேண்டியதால் பெரும்பாலானவர்கள் வீட்டில் காலை உணவை தவிர்க்கின்றனர். சிலர் குடும்ப சூழ்நிலையினாலும் காலையில் சாப்பிட முடியாமல் விடுகின்றனர். இதற்கிடையில், முதலமைச்சர் பள்ளிப் பிள்ளைகளுக்கு கல்வியுடன் சேர்த்து சாப்பாடும் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தை கருத்தில் கொண்டு, 2022 ஆம் ஆண்டு காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தார்.


1,447 பள்ளிகளில்...


இதன் படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் செயல்படும் 1,436 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், ஊரக பகுதிகளில் செயல்படும் 8 அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் செயல்படும் 3 அரசு உதவிபெறும் பள்ளிகளில் மொத்தம் 1,447 பள்ளிகள் கீழ் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 69,711 மாணவர்களுக்கு அனைத்து பள்ளி வேலைநாட்களிலும் காலை உணவு வழங்கப்படுகிறது.


இதனால் மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகிறார்கள், இடைநிற்றல் குறைந்துள்ளது, ஆரோக்கியம் மேம்பட்டு, ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படாமல் இருக்கின்றன. மாணவர்களின் தோழமை உணர்வு அதிகரித்து, வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமை குறைகிறது என்றும், படிப்புத்திறன் மேம்படுகிறது என்றும் கலெக்டர் தெரிவித்தார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%