முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் கே.எஸ்.ஆர்.கல்லூரி மாணவர்கள் சாதனை

முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் கே.எஸ்.ஆர்.கல்லூரி மாணவர்கள் சாதனை



நாமக்கல், அக். 12–


நாமக்கல் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விளையாட்டுப் போட்டியில் கே.எஸ்.ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் சாதனை புரிந்துள்ளனர்.


இக்கல்லூரி மாணவர்கள் கைப்பந்து, கையுந்து பந்து ஆகிய போட்டிகளில் முதலிடமும், மட்டைப்பந்து, வளைகோல் பந்து, மேசைப்பந்து, கூடைப்பந்து ஆகியவற்றில் இரண்டாம் இடமும், கையுந்து பந்து போட்டியில் மூன்றாம் இடமும், மகளிருக்கான கூடைப்பந்து போட்டியில் மூன்றாம் இடமும் மற்றும் தடகள போட்டியில் ஐந்து தங்கமும், ஒரு வெள்ளியும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.


மேலும் மாநில அளவில் நடைபெறவுள்ள போட்டிக்களுக்கு தேர்வாகி உள்ளனர்.


இப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 2 லட்சத்து 22,000 பரிசு தொகையும் வென்றுள்ளனர். போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று சாதனைகளை படைத்த மாணவர்களை கே.எஸ்.ரங்கசாமி கலை அறிவியல் கல்வி நிறுவனத்தின் தாளாளர் ஆர்.சீனிவாசன், துணைத்தாளாளர் கே.எஸ்.சச்சின், கல்லூரியின் முதல்வர் எம்.பிரசன்னா ராஜேஷ் குமார், உடற்கல்வித்துறை இயக்குநர்கள் எஸ்.முத்து கண்ணன், ஆர்.குமரவேல் மற்றும் பயிற்சியாளர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்களுக்கு பாராட்டுகளை வாழ்த்துகளையும் தெரிவித்து ஊக்கப்படுத்தினர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%