விராட் கோலி சாதனையை சமன் செய்த ஷுப்மன் கில்!

விராட் கோலி சாதனையை சமன் செய்த ஷுப்மன் கில்!



மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ராக டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெற்று வரும் 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் ஷுப்​மன் கில் பல்​வேறு சாதனை​களை படைத்​தார். அதன் விவரம்:


>2025-ம் ஆண்​டில் ஷுப்​மன் கில் 5 சதங்​களை அடித்​துள்​ளார். இதன் மூலம் அவர், கேப்​ட​னாக பொறுப்​பேற்ற முதல் ஆண்​டில் அதிக சதங்​கள்

அடித்த வீரர் என்ற பெரு​மையை பெற்​றுள்​ளார்.


>இந்​திய வீரர்​களில் கேப்​ட​னாக விராட் கோலி கடந்த 2017 மற்​றும் 2018-ல் தலா 5 சதங்​களை விளாசி​யிருந்​தார். இதன் முலம் ஒரே காலண்​டர் ஆண்​டில் அதிக சதங்​கள் விளாசிய கேப்​டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்​திருந்​தார். இந்த சாதனையை தற்​போது ஷுப்​மன் கில் சமன் செய்​துள்​ளார்.


>கேப்​ட​னாக ஷுப்​மன் கில் 12 இன்​னிங்​ஸ்​களில் 5 சதங்​கள் அடித்​துள்​ளார். கேப்​ட​னாக குறைந்த இன்​னிங்​ஸ்​களில் 5 சதங்​கள் அடித்த வீரர்​களில் இங்​கிலாந்​தின் அலாஸ்​டர் குக் (9 இன்​னிங்​ஸ்​கள்), இந்​தி​யா​வின் சுனில் கவாஸ்​கர் (10 இன்​னிங்​ஸ்​கள்) ஆகியோர் முதல் 2 இடங்​களில் உள்​ளனர். அதேவேளை​யில் போட்​டியை கணக்​கிட்​டால் ஷுப்​மன் கில்​லும், ஆஸ்​திரேலி​யா​வின் ஜாம்​ப​வான் டான் பிராட்​மேனும் தலா 7 போட்​டிகளில் கேப்​ட​னாக 5 சதங்​களை அடித்​துள்​ளனர். அலாஸ்​டர் குக் 5 போட்​டிகளி​லும், கவாஸ்​கர் 6 போட்​டிகளி​லும் இந்த சாதனையை நிகழ்த்தி உள்​ளனர்.


>டெஸ்ட் கிரிக்​கெட்​டில் குறைந்​தது ஏழு முறை​யா​வது தங்​கள் அணி​களை வழிநடத்​தி​ய​வர்​களில் அதிக சராசரியை டான் பிராட்​மேன் (101.51) வைத்​துள்​ளார். இவருக்கு அடுத்த இடத்தை கேப்​ட​னாக ஷுப்​மன் கில் பிடித்​துள்​ளார். அவரது சராசரி 84.81 ஆக உள்​ளது.


>மேற்கு இந்​தி​யத் தீவு​களுக்கு எதி​ரான டெல்லி டெஸ்ட் போட்​டி​யில் இந்​திய அணி 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 518 ரன்​களை குவித்து முதல் இன்​னிங்ஸை டிக்​ளேர் செய்​தது. இந்​திய அணி​யின் ஸ்கோரில் பையோ, லெக் பையோ ஒன்​றுகூட கிடை​யாது. டெஸ்ட் கிரிக்​கெட்​டில் பை, லெக் பை இல்​லாமல் அதிக ரன்​கள் குவிக்​கப்​பட்ட போட்டி இது​வாகும். இதற்கு முன்​னர் 2018-ல் இலங்கை அணிக்கு எதி​ரான டெஸ்​டில் வங்​கதேச அணி 513 ரன்​கள் குவித்​திருந்​தது.


>இந்​திய அணி​யின் முதல் இன்​னிங்​ஸில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​யின் வேகப் பந்து வீச்​சாளர்​கள் 318 பந்​துகளை வீசிய போதி​லும் ஒரு விக்​கெட்டை கூட கைப்​பற்​ற​வில்​லை. 300 பந்​துகளுக்கு மேல் வீசி அந்த அணி​யின் வேகப்​பந்து வீச்​சாளர்​கள் விக்​கெட் கைப்​பற்ற முடி​யாமல் போனது இது 3-வது முறை​யாகும். இதற்கு முன்​னர் 1972-ல் நியூஸிலாந்து அணிக்கு எதி​ராக 540 பந்​துகளை​யும், 2016-ல் பாகிஸ்​தானுக்கு எதி​ராக 432 பந்​துகளை​யும் வீசி விக்​கெட்​ ஏதும்​ கைப்​பற்​றாமல்​ இருந்​துள்ளனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%