முதுகலை பட்​ட​தாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு: தமிழ் தகுதித்தாளில் 85 ஆயிரம் பேர் தோல்வியடைந்த அவலம்

முதுகலை பட்​ட​தாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு: தமிழ் தகுதித்தாளில் 85 ஆயிரம் பேர் தோல்வியடைந்த அவலம்



முதுகலை பட்​ட​தாரி ஆசிரியர் தேர்வு தமிழ் தகுதித்தாளில் 85 ஆயிரம் பேர் தோல்வியடைந்துள்ளனர்.


முதுகலை பட்​டதாரி ஆசிரியர், உடற்​கல்வி இயக்​குநர் (கிரேடு-1), கணினி பயிற்​றுநர் (கிரேடு-1) ஆகிய பதவி​களில் 1,996 காலி இடங்​களை நிரப்​பும் வகை​யில் கடந்த அக்டோபர் 12-ம் தேதி போட்​டித் தேர்வு நடத்​தப்​பட்​டது.


முதுகலை ஆசிரியர் தேர்​வில் சம்​பந்​தப்​பட்ட பாடம், கல்வி உளவியல், பொது அறிவு ஆகிய பகு​தி​களில் இருந்து 150 கேள்விகள் இடம்​பெற்றன. இதற்கு 150 மதிப்​பெண். அதேபோல, கட்டாயத் தமிழ் மொழி தகு​தித்​தாள் தேர்​வில் 30 கேள்வி​களுக்கு 50 மதிப்​பெண். இதில் 40 சதவீத மதிப்​பெண் அதாவது 50-க்கு 20 மதிப்​பெண் பெற்​றால் மட்​டுமே தேர்​வர்​களின் பாட விடைத்​தாள் மதிப்​பீடு செய்​யப்​படும். இறுதி விடைக்​குறிப்​பு, தேர்வு முடிவு​கள் மற்​றும் ‘1: 1.25’ என்ற விகி​தாச்​சார அடிப்​படை​யில் சான்​றிதழ் சரி​பார்ப்​புக்​கான பட்​டியல் தேர்வு வாரி​யத்​தின் இணை​யதளத்​தில் பாட​வாரி​யாக வெளி​யிடப்​பட்​டுள்​ளது. மொத்​தம் 2.36 லட்​சம் பேர் தேர்வு எழு​திய நிலை​யில், தமிழ் தகு​தித்​தாள் தேர்​வில் 85 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் தோல்வி அடைந்​துள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. மேலும், மற்ற அனைத்து பாடத்தேர்வையும் நன்றாக எழு​தி, தமிழ் தகு​தித்​தாளில் தேர்ச்சி பெறாத​தால் வெற்றி வாய்ப்​பை இழந்​த தேர்வர்​களு​ம்​ இதில் உள்​ளனர்​ என்பது குறிப்பிடத்தக்கது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%