100 பிறவி எடுத்தாலும், நடிகனாகவே பிறக்க ஆசை...: கோவா விழாவில் ரஜினி உருக்கம்
“100 பிறவிகள் எடுத்தாலும், நான் ரஜினிகாந்தாகவே பிறக்க விரும்புகிறேன்” என்று கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
கோவாவில் 56-வது சர்வதேச திரைப்பட விழா கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இதனை மத்திய இணை மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்தார்.
இதில் சினிமாவில் பல்வேறு சாதனைகள் செய்த கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்பட்டார். தனது தனித்துவமான நடிப்பு திறனால் பல தலைமுறைகளைக் கடந்து பார்வையாளர்களை கவர்ந்துள்ளார்.
இதில் சினிமாவில் பல்வேறு சாதனைகள் செய்த கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்த நடிகர் ரஜினிகாந்துக்கு நேற்று சிறப்பு விருது அளித்து கவுரவிக்கப்பட்டார். கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், ரஜினிகாந்துக்கு பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார். மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள்துறை இணையமைச்சர் எல்.முருகன், தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் சஞ்சய் ஜாஜூ, நடிகர் ரன்வீர் சிங் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
விழாவில் ரஜினிகாந்த் பேசும்போது, ‘‘எனக்கு விருது வழங்கி கவுரவம் செய்த மத்திய அரசுக்கும் கோவா மாநில அரசுக்கும் நன்றி. இப்போதுதான் சினிமாவில் வந்தது போல இருக்கிறது அதற்குள் 50 ஆண்டுகள் கடந்து விட்டது. சினிமாவையும், நடிப்பையும் என்றுமே விரும்புகிறேன். இன்னும் நூறு பிறவிகள் எடுத்தால் கூட நடிகனாகவே பிறக்க ஆசைப்படுகிறேன்.
என்னை வாழவைக்கும் ரசிகர்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்", என்று குறிப்பிட்டார். இந்த விழாவில் இதுவரை 170-க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?