முதுகுத்தண்டு சிகிச்சை குறித்த சர்வதேச மாநாடு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்

முதுகுத்தண்டு சிகிச்சை குறித்த சர்வதேச மாநாடு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்



சென்னை, நவ.2- முதுகுத் தண்டு மருத்து வர்கள் சங்கத்தின் ) 25-வது வருடாந்திர மாநாட்டை சென்னையில் சனிக்கிழமை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் டாக்டர். பழனிவேல் தியாகராஜன் தொடங்கிவைத்தார். காவேரி மருத்துவ மனையால், ஹம்சா ரீஹேப் மையத்தின் ஒத்து ழைப்போடு நடத்தப் படும் இந்த மாநாடு மருத்து வத்தின் பல்துறைகள் சங்கமிக்கும் ஒரு முக்கிய நிகழ்வாகும். இதில் இந்தியா முழுவதிலுமிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை நிபுணர்கள், மறுவாழ்வு சிகிச்சை வல்லு நர்கள், நரம்பியல் அறிவிய லாளர்கள் மற்றும் தொடர்பு டைய சுகாதாரப் பணி யாளர்கள் பங்கேற்கின்ற னர். முதுகெலும்பு அதிர்ச்சி மற்றும் முதுகுத்தண்டு காய சிகிச்சை முறையில் ஏற்பட்டுள்ள புதிய உத்தி கள் மற்றும் மேம்பாடுகள் குறித்த சமீபத்திய தகவல்களைப் பகிர்ந்து கொள்ள இந்த மாநாடு ஒரு சிறப்பான தளமாக அமைகிறது. அக்.31 முதல் நவம்பர் 2 வரை மூன்று நாட்கள் நடைபெற்ற இம்மாநாடு காயம் ஏற்பட்டதிலிருந்து சிகிச்சை மூலம் குண மடைதல் வரை, முதுகுத் தண்டு சிகிச்சை மீது ஒரு முழுமையான கண்ணோ ட்டத்தை வழங்குவதையும், அறுவைசிகிச்சைக்கும் மறுவாழ்வு சேவைக்கும் இணைப்புப் பாலமாகத் திகழும் வகையிலும் ட வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்க ளாக, முதுகெலும்பு காயம் அதிர்ச்சி குறித்த நேரடி பயிற்சிப் பட்டறைகள், ஆழ மான சிந்தனை அரங்கு கள் மற்றும் நிபுணர்களின் ஊடாடும் கலந்துரை யாடல்கள் ஆகியவை நடைபெற்றன என்று முது குத்தண்டு சங்கத்தின் தலைவர் டாக்டர். எச்.எஸ் சாப்ரா கூறினார். காவேரி மருத்துவமனை யின் இணை நிறுவனரும், செயல் இயக்குநருமான டாக்டர். அரவிந்தன் செல்வ ராஜ் இந்த மாநாட்டில் பங்கேற்கும் உலகளா விய மருத்துவ நிபுணர்களி டையே நிகழும் கலந்துரை யாடல்களும் விவா தங்களும், இந்தியாவில் நரம்பியல் மற்றும் முதுகுத்தண்டு ஆரோக்கி யத்தின் எதிர்காலத்தை வடிவமைக்க நிச்சயம் உதவும்.” என்றார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%