ராஜபாளையம் பகுதியில் பெய்த கனமழை: சாஸ்தா கோயில் அணை விவசாயிகள் மகிழ்ச்சி

ராஜபாளையம், ஆக.19–
ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் கனமழை காரணமாக தேவதானம் சாஸ்தா கோயில் அணை நிரம்பி உபரிநீர் வெளியேறி கண்மாய்களுக்கு நீர் வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராஜபாளையம் அருகே தேவதானம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சாஸ்தா கோயில் அணை மூலம் தேவதானம் பெரியகுளம், நகர குளம், வாண்டையார்குளம், சேர்வராயன் குளம், முகவூர் குளம் உட்பட 11 கண்மாய்களும், 3 ஆயிரம் எக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக சாஸ்தா கோயில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
நீர்மட்டம் கிடுகிடு உயர்வு
கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக சாஸ்தா கோயிலில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் சனிக்கிழமை அதிகாலை 5 மணி வரை கனமழை பெய்தது.
ராஜபாளையம் பகுதியில் 13 செ.மீ மழை பொழிவு பதிவானது. சனிக்கிழமை அதிகாலை 5 மணி அளவில் 36 அடி உயரம் கொண்ட சாஸ்தா அணை முழுவதும் நிரம்பியது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து 500 கன அடிக்கும் குறையாமல் நீர் வந்து கொண்டிருப்பதால், உபரிநீர் வெளியேறி கண்மாய்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?