சென்னையில் ஒரே நாளில் 210 இடங்களிலிருந்து சேகரித்த 57.84 டன் பழைய சோபாக்கள், மெத்தைகள் விஞ்ஞான முறையில் எரியூட்டப்பட்டது

சென்னையில் ஒரே நாளில் 210 இடங்களிலிருந்து சேகரித்த  57.84 டன் பழைய சோபாக்கள், மெத்தைகள் விஞ்ஞான முறையில் எரியூட்டப்பட்டது


சென்னை, அக்.19–


சென்னை மாநகராட்சி சார்பில் நேற்று (18–ந் தேதி) ஒரு நாள் மட்டும் 210 இடங்களிலிருந்து 57.84 டன் பழைய சோபாக்கள், மெத்தைகள் உள்ளிட்ட பழைய பொருட்கள் சேகரிக்கப்பட்டு, கொடுங்கையூர் எரியூட்டும் நிலையத்திற்கு கொண்டு சென்று விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றப்பட்டது.


இப்பணியில் 83 வாகனங்களும், 200க்கும் மேற்பட்ட பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.


சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாள் தோறும் சராசரி யாக 6,500 டன் திடக் கழிவு களும், 1,000 டன் கட்டடம் மற்றும் கட்டுமான இடு பாட்டுக் கழிவுகள் அகற்றப் பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் குப்பைகள் மட்டுமல்லாது, தங்களது வீட்டில் உள்ள பழைய சோபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகளை பொது இடங்களில் கொட்டுவதைத் தவிர்த்திடும் விதமாகவும், மக்களுக்கு இதன் காரணமாக ஏற்படும் இடையூறு மற்றும் சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படுவதைத் தவிர்த்திடும் விதமாகவும், தமிழ்நாட்டில் முதல் முறையாக சென்னை மாநகராட்சியின் சார்பில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பொதுமக்கள் முன்கூட்டியே தரும் தகவலின் அடிப்படையில், அவர்களின் வீடுகளிலிருந்து பழைய சோபாக்கள்,மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் ஆகிய திடக்கழிவுகளை அகற்றிடும் புதிய நடவடிக்கை கடந்த 11–ந் தேதி அன்று தொடங்கப்பட்டது. இதில் 145 நபர்களிடமிருந்து வரப்பெற்ற தகவலின் அடிப்படையில் 45.64 டன் பழைய பொருட்கள் பெறப்பட்டு, கொடுங்கையூரில் உள்ள எரியூட்டும் நிலையத்திற்கு எடுத்துச் சென்று விஞ்ஞான முறையில் எரியூட்டப்பட்டது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%