தமிழகத்தில் பட்டாசு வெடிவிபத்தில் 89 பேருக்கு காயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் பட்டாசு வெடிவிபத்தில் 89 பேருக்கு காயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்



தீ காயமடைந்து சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவரின் நலம் குறித்து விசாரிக்கும் அமைச்சர்

சென்னை: தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு வெடித்ததில் 89 பேர் காயமடைந்ததாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: "மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (அக்.20ம் தேதி) சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தீபாவளி பண்டிகை பட்டாசு விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மருத்துவ பயனாளிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்து, தீ விபத்து சிகிச்சை வார்டுகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த களப் பணியாளர்களுடன் தேநீர் அருந்தி, இனிப்புகள் வழங்கி கலந்துரையாடினார்.


பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தீ விபத்து சிகிச்சை வார்டு ஆய்வு - திமுக அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு தமிழக முதல்வரின் வழிகாட்டுதலோடு, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி அன்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருகை புரிந்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த களப் பணியாளர்களுடன் கலந்துரையாடி, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் சொல்லி, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்து செல்வது என்பது தொடர் வாடிக்கையாக இருந்து வருகிறது.


அந்த வகையில் இந்த ஆண்டும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருகை புரிந்து இம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து இருக்கிறோம். தமிழக முதல்வர் ஒவ்வொரு தீபாவளி முன்பாகவும் பாதுகாப்பற்ற முறைகளில் பட்டாசு வெடிப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வும், எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அரசின் பல்வேறு துறைகளின் எடுத்துரைக்க வேண்டும் என்றும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தி யிருக்கிறார்கள்.


அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் காவல்துறை, தீயணைப்புத் துறை, மாசுக்கட்டுப் பாட்டு வாரியம் போன்ற பல்வேறு துறைகள் இதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. மக்கள் நல்வாழ்வுத் துறையைப் பொறுத்தவரை முதல்வரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், வட்டார அரசு மருத்துவமனைகளிலும் தீபாவளி அன்று சிறப்பு சிகிச்சை வார்டுகள் அனைத்து மருத்துவமனைகளிலும் தொடங்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் 36ல் தலா 20 படுக்கைகள் வீதம் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கான தீக்காய பிரிவு வார்டுகள் தொடங்கப்பட்டிருக்கிறது.


அந்த வகையில் கடந்த வாரம் இம்மருத்துவமனையில் 20 படுக்கை வசதிகளுடன் கூடிய வெண்டிலேட்டர் கருவியுடன் கூடிய வார்டுகள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று தனித்தனி வார்டுகள் தொடங்கப்பட்டது. நேற்று முதல் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் தமிழ்நாடு ழுழுவதும் தொடங்கி பட்டாசு வெடித்ததினால் தமிழ்நாடு முழுவதும் சிகிச்சைக்கு வந்தவர்களின் எண்ணிக்கை 89 பேர், இதில் 41 பேர் சிகிச்சை பெற்று நலமுடன் இல்லம் திரும்பி இருக்கிறார்கள். 48 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த 48 பேரில் சிறிய அளவிலான அறுவை சிகிச்சை என்கின்ற வகையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் 8 பேர், மிகச் சிறிய அளவில் அறுவை சிகிச்சை என்கின்ற வகையில் 32 பேர், அந்த வகையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் 6 குழந்தைகள் பாதிக்கப்பட்டு ஒரு மகளிர் சகோதரி ஒருவர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.




இந்த 7 பேரில் ஒரு குழந்தைக்கு மட்டும் 7% அளவிற்கு தீக்காய பாதிப்பும், ஒரு குழந்தைக்கு 15% தீக்காய பாதிப்பும் ஏற்பட்டிருக்கிறது. யாருக்கும் உயிர் பாதிப்பு என்கின்ற அளவில் பிரச்சினை இல்லை. மிகப் பெரிய அளவில் காயங்கள் இல்லாமல் தீபாவளி கடந்துக் கொண்டிருக்கிறது. இன்னமும் மீதமுள்ள நேரம் கடந்துக் கொண்டிருக்கிறது.


இன்னமும் பாதுகாப்பான தீபாவளி மக்கள் கொண்டாட வேண்டும் என்கின்ற வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்து கின்ற வகையிலும், தீபாவளி நாளில் தங்களுடைய குடும்பத்தை விட்டு, அரசு மருத்துவமனைகளில் குறிப்பாக தீக்காய சிகிச்சை வார்டுகளில் பணியாற்றுகின்ற மகத்தான மருத்துவச் சேவை ஆற்றுகின்ற மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்களை பாராட்டுகின்ற வகையில் ஒவ்வொரு ஆண்டும் நான் நேரில் சென்று அவர்களுடன் தேநீர் அருந்தி அவர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறோம். அந்த வகையில் இந்த நிகழ்ச்சி இன்றைக்கு நடைபெற்று வருகிறது.



கன்யான் திட்ட செயற்கைக்கோளுக்காக புதிய ராக்கெட் தயாரிக்க முயற்சி


திருநெல்வேலி, அக்.19- மனிதர்களை விண் வெளிக்கு அனுப்பும் ககன் யான் திட்டத்தில் 80 ஆயிரம் கிலோ செயற்கைக்கோளை சுமந்து செல்​லும் வகையில் புதிய ராக்கெட் தயாரிக்கும் முயற்சி நடைபெறுகிறது என்று இந்​திய விண்​வெளி ஆராய்ச்சிக் கழக (இஸ்​ரோ) தலை​வர் வி.நாராயணன் தெரிவித்தார். திருநெல்​வேலி மாவட்​டம் வடக்கன்​குளத்​தில் உள்ள தனி​யார் கல்லூரி யில் நடைபெற்ற விழாவில் இஸ்​ரோ தலைவர் வி.நாரா யணன் பங்கேற்றார். இதன் பின்​னர் செய்தி​யாளர்​களிடம் அவர் கூறிய ​தாவது: இந்​திய வானிலை ஆராய்ச்​சிக்கு அதிக அள வி​லான செயற்​கைக்கோள்​களை அனுப்பி இருக்கிறோம். இதனால், வானிலை குறித்த தகவல்​களை மிகத் துல்​லியமாக, முன்​கூட்​டியே பெற முடி கிறது. மீனவர்​கள் கடலில் எல்​லையை கடக்​காமல் இருக்​க​வும், மீன்​கள் அதி​க​மாக உள்ள பகு​தி​களை அறியவும், ஆயிரத்​துக்கும் மேற்பட்ட இணைய செயலிகளை உரு​வாக்கி கொடுத்​துள்​ளோம். அதன் மூல​மாக தமிழிலேயே தக வல்​களைப் பெற முடி​யும். ககன்​யான் திட்​டத்​துக்​காக 80 ஆயிரம் சோதனை​கள் நடை​பெற்​றுள்​ளன. இத்​திட்​டத்​தில் முதலில் 3 ஆளில்லா ராக்​கெட்​களை விண்​ணுக்கு அனுப்பி சோதனை செய்த பின்​பே, ஆட்களை விண்​ணுக்கு அனுப்​புவோம். அதற்​கான முதல் ராக்​கெட் இந்த ஆண்டு இறு​தி​யில் விண்​ணுக்கு செலுத்​தப்​படும். அடுத்த ஆண்டு 2 ராக்​கெட்​டு​கள் ஏவப்​படும். விண்வெளி​யில் இருக்கும் நபர்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்​பட்​டால், அதிலிருந்து தப்​பிக்க ‘க்ரூ எஸ்​கேப் சிஸ்​டம்’ என்ற பாது​காப்பு அமைப்பை வெற்​றிகர​மாக சோதித்துள் ளோம். உலக அளவில் விண்​வெளிக்கு ராக்​கெட்​களை வணிகப் பயன்​பாட்​டுக்கு பயன்​படுத்​து​வ​தில் இந்​தியா 2 சதவீத பங்​களிப்பை கொண்​டுள்​ளது. இதை 10 சதவீத​மாக உயர்த்​தும் முயற்​சி​யில் ஈடு​பட்டு வருகிறோம். தற்​போது, 10 ஆயிரம் கிலோ எடை கொண்ட செயற்கைக் கோள்​களை எடுத்து செல்​லும் ராக்​கெட்​களை வெற்​றிகர​மாக அனுப்பி உள்​ளோம். 40 ஆயிரம் கிலோ எடை கொண்ட செயற்கைக் ​கோளை அனுப்​புவதற்கு தேவையான ராக்​கெட்​டு​களை தயாரிக்க அனு​மதி கிடைத்​துள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​னார்.


 


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%