அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் பிரகாஷ் நீக்கம் ஆளுநரின் முடிவைக் கண்டித்து சிண்டிகேட் தீர்மானம்

அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் பிரகாஷ் நீக்கம் ஆளுநரின் முடிவைக் கண்டித்து சிண்டிகேட் தீர்மானம்



சென்னை, அக்.19 - சென்னை அண்ணா பல்கலைக்கழ கப் பதிவாளர் பிரகாஷ், அப்பதவி யிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் துணைவேந்தர் வேல் ராஜ், தனியார் கல்லூரிகளுக்கு அங்கீ காரம் வழங்கியதில் முறைகேடு புகார் தொடர்பாக, ஓய்வுபெறும் நாளில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்தப் பணியிடை நீக்க உத்தரவை வேந்தரான ஆளுநர் ஆர்.என்.ரவி ரத்து செய்து, பணப்பலன்களை வழங்க உத்தரவிட்டார். இந்நிலையில், சனிக்கிழமை (அக்.18) நடைபெற்ற பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில், ஆளுநரின் இந்த முடிவைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், முறைகேடு புகாரில் வேல் ராஜுடன் பதிவாளர் பிரகாஷ் மற்றும் 12 அலுவலர்களுக்குத் தொடர்பு உள்ள தாகவும், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசா ரணை செய்யும் வழக்கில் சம்பந்தப்பட்ட வர் தலைமைப் பொறுப்பில் இருக்கக் கூடாது என்றும் உறுப்பினர்கள் ஆட்சே பணை தெரிவித்தனர். இதன் காரணமாகவே பதிவாளர் பதவியில் இருந்து பிரகாஷ் நீக்கப்பட்டு உள்ளார். மேலும், பொறியியல் கல்லூரி களில் போலி ஆசிரியர்கள் நியமனம் செய் யப்பட்ட விவகாரம் குறித்தும் விவாதிக் கப்பட்டது. முறைகேட்டில் தொடர்பு டைய 700-க்கும் மேற்பட்ட பேராசிரியர் களுக்கு வாழ்நாள் தடை விதிப்பது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பவும் உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ள தாகத் தகவல் வெளியாகி உள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%