போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் கதிர்வீச்சு துறைக்கு ஐரோப்பிய பயிற்சி அங்கீகாரத் திட்ட சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே இந்த அங்கீகாரத்தைப் பெற்ற ஒரே மருத்துவமனை என்ற பெருமையை இது பெற்றுள்ளது. மருத்துவமனையின் கதிரியக்கவியல் துறை தலைவர் டாக்டர் பி.எம்.வெங்கடசாய் கூறுகையில், “அதி நவீன பெட் சிடி உள்பட பல்வேறு கதிரியக்க பரிசோதனைக் கருவிகள் இங்கு உள்ளன. ஆண்டுதோறும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு துல்லியமான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஐரோப்பிய பயிற்சி அங்கீகாரத் திட்டக் குழுவினர் மதிப்பீடு செய்து, அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட தரநிலையில் உள்ளதை உறுதிசெய்தனர்” என்றார். ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு, கதிரியக்க பாதுகாப்பு மற்றும் கதிர்வீச்சு நுட்பம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கியதற்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 5ஆண்டுகளுக்கு இந்த அங்கீகாரம் செல்லுபடியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?