விழுப்புரம் மாவட்டத்தில், கெங்கராம்பாளையம் சோதனைச் சாவடி அருகே மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் சுஜாதா தலைமையிலான காவல்துறையினர் வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்திச் சோதனை செய்தபோது, அதில் புதுச்சேரியில் இருந்து மதுபானங்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாகச் சேலம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த சுகுந்தன் (24) மற்றும் தீபக் (20) ஆகிய இருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் விற்பனைக்காக மதுபானங்களைக் கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் 180 மிலி அளவு கொண்ட 480 மதுபானப் பாட்டில்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து, இருவரையும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?