கே.வி.குப்பம் அருகே பாலாற்று வெள்ளத்தில் அடித்துச்சென்ற தனது மாட்டை மீட்க முயன்ற மூதாட்டி நீரில் மூழ்கி பலியானார். அவரது மருமகள் உயிருடன் மீட்கப்பட்டார். காவனூர் ஊராட்சி கருத்தம்பட்டை சேர்ந்த வஜ்ஜிரம் (70) மாடுகள் வளர்த்து வருகிறார். அவரது மனைவி கீதா (60), மருமகள் பூர்ணிமா (30) ஆகியோர் செவ்வாயன்று பசுமாடுகளை பாலாற்றங்கரை வயல்வெளியில் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றனர். ஒரு பசுமாடு காணாமல் போனது. புதனன்று மாலை பசுமாடு ஆற்றின் மறுபக்கம் நீரில் அடித்துச்சென்று தத்தளிப்பதாக தகவல் கிடைத்தது. கீதாவும் பூர்ணிமாவும் மாட்டை மீட்க ஆற்றில் இறங்கியபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். கிராம மக்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி இருவரையும் மீட்டனர். போலீசார் இருவரையும் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். டாக்டர்கள் பரிசோதனையில் கீதா ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பூர்ணிமாவிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?