படைத்துறை தொழிற்சாலை ஊழியர்கள் கார்ப்பரேசனில் இணைய மறுப்பு!

படைத்துறை தொழிற்சாலை ஊழியர்கள் கார்ப்பரேசனில் இணைய மறுப்பு!

ஒன்றிய அரசு பணியை ராஜினாமா செய்துவிட்டு 7 கார்ப்பரேசன்களில் இணைவதற்கு 41 படைத்துறை தொழிற்சாலை ஊழியர்கள் எவரும் தயாராக இல்லை என அனைத்து சம்மே ளனங்களும், சங்கங்களும் பாதுகாப்பு உற்பத்தித் துறை செயலாளரிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன. அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சி.ஸ்ரீகுமார் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “படைத்துறை தொழிற்சாலை ஊழியர்கள் அதிகாரிகள் உட்பட எவரும் அரசு பணியை ராஜினாமா செய்து கார்ப்பரேஷன் ஊழியராக மாற விரும்பவில்லை என மத்திய அரசுக்கு தெளிவாக அறிவித்துள்ளோம். இந்நிலையில், கடந்த 10ஆம் தேதி பாதுகாப்பு உற்பத்தித் துறை செயலாளர், 7 கார்ப்பரேசன்களின் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அழைப்பு விடுத்தார்” என்றார். கூட்டத்தில் தலைமை தாங்கிய பாதுகாப்பு உற்பத்தித் துறை செயலாளர், “உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் குறித்து பேசுவதற்காக அழைத்திருந்தாலும், கார்ப்பரேசனில் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்” என வலியுறுத்தினார். இதை அனைத்து சம்மேளனங்களும் சங்கங்களும் ஒட்டுமொத்தமாக நிராகரித்தன. அரசு ஊழியர்களாகவே பணி நிறைவு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், தன்னிச்சையான பீஸ்ரேட் குறைப்பு, உத்தரவாத ஊதியம் வழங்காதது, அனைத்து தொழிற்சாலைகளுக்கும் போதுமான பணிச்சுமை வழங்காதது, பணிச்சுமை உள்ள தொழிற்சாலைகளில் மிகை நேர ஊதியம் வழங்காதது, கருணை அடிப்படையிலான வேலைவாய்ப்பு நிறுத்தம், காலியிடங்களை நிரந்தரமாக நிரப்பாதது ஆகியவற்றை கண்டித்து குரல் எழுப்பப்பட்டது. இந்த பிரச்சனைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%