விரைவு ரயில்களின் சேவை நேரங்களில் மாற்றம்

விரைவு ரயில்களின் சேவை நேரங்களில் மாற்றம்

சென்னை ரயில் கோட்டப் பகுதிகளில் ரயில் பாதை மேம்பாட்டுப் பணிகள் நடை பெறுவதால், வரும் நாட்களில் பல விரைவு ரயில்களின் சேவை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, நவம்பர் 26 அன்று, சென்னை சென்ட்ரல் - பெங்களூரு மற்றும் சென்ட்ரல் - ஏற்காடு விரைவு ரயில்கள் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் தாமதமாகப் புறப்படும். மேலும், நவம்பர் 26, 27, 29 மற்றும் டிசம்பர் 1 ஆகிய நாட்களில் எழும்பூர் - மதுரை வைகை விரைவு ரயில் 20 நிமிடங்கள் தாமதமாகச் சென்றடையும். திருவனந்தபுரம் - செகந்திராபாத் ரயில் உட்பட பல நீண்டதூர ரயில்கள் பல்வேறு நாட்களில் 15 நிமிடங்கள் முதல் 3 மணி நேரம் 45 நிமிடங்கள் வரை தாமதமாகச் செல்லும் அல்லது சென்ற டையும். இதற்கிடையில், சூலூர்பேட்டை ரயில் நிலையம் அருகே நடைபெறும் பணி காரணமாக, சூலூர்பேட்டை - சென்ட்ரல் (மாலை 6:40) மற்றும் சென்ட்ரல் - ஆவடி (இரவு 9:25) மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன. மேலும், சென்ட்ரல் - சூலூர்பேட்டை மற்றும் சூலூர்பேட்டை - சென்ட்ரல்/கடற்கரைக்கு இடையே இயங்கும் பல மின்சார ரயில்கள் எளாவூர் மற்றும் கும்மிடிப்பூண்டி வரை மட்டுமே பகுதியாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%