ஆட்டோவில் பயணியிடம் 6 சவரன் நகை பறிப்பு

ஆட்டோவில் பயணியிடம் 6 சவரன் நகை பறிப்பு

மாதவரம் அருகே ஆட்டோவில் வந்த பயணியிடம் 6 சவரன் நகை பறித்த ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். மாதவரத்தை சேர்ந்த அஜித் நாயர் (33) வட பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். புதன்கிழமை அன்று அவரும் அதே நிறுவனத்தில் பணிபுரியும் 20 வயது பெண்ணும் மாதவரம் பேருந்து நிலை யத்திலிருந்து ஆட்டோவில் பயணம் செய்தனர். மாத வரம் சின்ன ரவுண்டானா வி.எஸ்.மணிநகர் அருகே சென்றபோது ஆட்டோ ஓட்டுநர் மறைவிடத்திற்கு சென்று, கத்தியைக் காட்டி மிரட்டி அஜித் நாயர் கழுத்தில் இருந்த 6 கிராம் தங்கச் செயினைக் கேட்டார். அவர் மறுக்கவே, உடன் வந்த இளம்பெண்ணைப் பிடித்துக்கொண்டு நகையை கழற்றி கொடுக்கு மாறு மிரட்டினார். பயந்த பெண் அலறியதைக் கேட்டு அந்தவழியாக சென்ற வர்கள் ஓடிவர, ஓட்டுநர் செயினைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். அஜித் நாயர் புகாரின் பேரில் மாதவரம் குற்றப்பிரிவு காவல்துறை சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, மாத வரத்தை சேர்ந்த பிரசாத் என்பவரை (24) கைது செய்தனர். 6 சவரன் செயின் மீட்கப்பட்டது. குற்றவாளி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%