ராமேசுவரத்திலிருந்து மன்னாருக்கு படகில் சென்ற இலங்கை தொழிலதிபர் உட்பட 4 பேர் கடற்படையினரால் கைது
ஐங்கரன்
ராமேசுவரம்: ராமேசுவரத்திலிருந்து மன்னாருக்கு படகில் சென்ற இலங்கை தொழிலதிபர் உட்பட 4 பேரை அந்நாட்டு கடற்படையினர் கைது செய்தனர். இலங்கை மன்னார் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஐங்கரன் (34). இவர் மீது மன்னார் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால், வழக்குகளில் இருந்து தப்புவதற்காக தனது குடும்பத்துடன் தமிழகம் வந்து, ராமநாதபுரத்தில் வீடு எடுத்து சட்டவிரோதமாக தங்கியிருந்தார்.
இலங்கையில் ஐங்கரன் மீது இருந்த வழக்குகளின் விசாரணை முடிவடைந்து, அவர் வழக்குகளில் இருந்து விடுபட இருந்ததால், மீண்டும் இலங்கைக்குச் செல்ல முடிவெடுத்தார். இதையடுத்து, ராமேசுவரத்திலிருந்து படகு மூலம் நேற்று அதிகாலை மன்னார் புறப்பட்டுச் சென்றார்.
அப்போது, தலைமன்னார் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், படகில் இருந்த ஐங்கரன் உட்பட 4 பேரை பிடித்து மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அதில் ஐங்கரன் சட்டவிரோதமாக ராமநாதபுரத்தில் 3 மாதங்கள் வரை குடும்பத்தினருடன் தங்கியிருந்து, பின்னர் ராமேசுவரத்திலிருந்து படகு மூலம் இலங்கை வந்தது தெரியவந்தது. இதையடுத்து, 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அதேபோல, ராமநாதபுரம் மாவட்ட போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?