ருமண விருந்தில் கஞ்சா: புதுமாப்பிள்ளை உள்பட 10 பேர் கைது

ருமண விருந்தில் கஞ்சா: புதுமாப்பிள்ளை உள்பட 10 பேர் கைது

சென்னை, ஜூலை 14


பட்டினப்பாக்கம் தனியார் ஓட்டலில் நடந்த திருமண விருந்தில் கஞ்சா பயன்படுத்திய புதுமாப்பிள்ளை உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.


சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், நுண்ணறிவுப்பிரிவு இணை ஆணையாளர் நேரடி மேற்பார்வையில், நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையாளர் கண்காணிப்பில், போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவினர் சென்னை பெருநகரில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, இது தொடர்பான குற்றவாளிகளையும், வலைபின்னல் தொடர்புகளில் உள்ளவர்களையும் கண்டறிந்து கைது செய்து, உரிய நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது.


இதன் தொடர்ச்சியாக, பட்டினப்பாக்கம் காவல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி. நகர் பகுதியில் உள்ள ஓட்டலில் உள்ள ஒரு அறையை கண்காணித்து அங்கு சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் ஓஜி கஞ்சா பயன்படுத்திய ஜெகதீஸ்வர் (34), சந்தோஷ் (27), தீபக் (27), ஆராதாத அக்ஷய்ராஜீ (21), ரோகித் (21), கிருஷ்ணபரிக் (20), சரத்குமார் (32), மதன்குமார் (29), ஜிலான் (28), காமேஷ் (25) ஆகிய 10 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 கிராம் கஞ்சா, 48 மில்லிகிராம் ஓஜி கஞ்சா மற்றும் 11 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


விசரணையில் ஜெகதீஸ்வர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்துள்ளதும், அதற்காக தனது நண்பர்களுக்கு ஓட்டலில் விருந்து வைத்த போது கஞ்சா பயன்படுத்தியதும் தெரியவந்தது.


விசாரணைக்குப் பின்னர் அவர்கள் 10 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.


குட்கா விற்ற 2 பேர் கைது


இதே போல் திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர், திருவல்லிக்கேணி, எல்லீஸ் ரோடு, தௌலத்கான் தெருவில் தீவிரமாக கண்காணித்து அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மாவா புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்த உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் பதக், வினோத்குமார் சூர்யமணி ஆகிய இருவரைகைது செய்தனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%