
கடலூர்: கடலூர் முதுநகரைச் சேர்ந்தவர் கப்பல் அதிகாரி விமல். கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் 27 அன்று, கட லூர் செல்லங்குப்பம் ஆஞ்சநேயர் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே மோட்டார் சைக்கிளில் தனது சகோதரி தென்ற லுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் அதி வேகமாக வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விமல் மற்றும் அவரது சகோதரி தென்றல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இறந்த விமலின் தந்தை சிவலிங்கம், தாய் விஜயா ஆகியோர் கடலூர் மூத்த வழக்கறிஞர் சிவமணி மற்றும் வழக்கறிஞர்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் மூலம் நஷ்ட ஈடு கோரி கடலூர் சிறப்பு மாவட்ட நீதிமன்றம் எண்.1-ல் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் இறந்த விமல் குடும்பத்தினருக்கு ரூ.1.62 கோடி வழங்க முதலில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, விமல் குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தேசிய மக்கள் நீதிமன்றம் ரூ.1.91 கோடி வட்டித் தொகையுடன் நஷ்டஈடு வழங்க சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவு வழங்கியுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?