ரூ.1.95 லட்சம் பித்தளை பிளேட்டுகள் திருட்டு: 3 பேர் கைது

ரூ.1.95 லட்சம் பித்தளை பிளேட்டுகள் திருட்டு: 3 பேர் கைது


சென்னை, அக். 19–


ஏழுகிணறு பகுதியில் பூஜை உபகரணங்கள் செய்யும் நிறுவனத்தில் ரூ.1.95 லட்சம் மதிப்புள்ள பித்தளை பிளேட்டுகளை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.


சென்னை, வால்டாக்ஸ் ரோடு, உட்வார்பு பகுதியில் பாலாஜி என்பவர் பாலாஜி இன்டஸ்ட்ரிஸ் என்ற பெயரில் பித்தளை பூஜை சாமான்கள் தயார் செய்யும் கம்பெனி நடத்தி வருகிறார். பாலாஜி கம்பெனியை பூட்டி விட்டு மறுநாள் வந்து பார்த்த போது கம்பெனியின் மேற்கூரை ஆஸ்பெட்டா ஷீட் உடைக்கப்பட்டு, நிறுவனத்திற்குள் இருந்து பித்தளை பிளேட்டுகளை யாரோ திருடிச்சென்றது தெரியவந்தது.


இது குறித்து பாலாஜி ஏழுகிணறு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஏழுகிணறு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட பாலாஜி, சுடலை மணி, பார்த்திபன் ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.1.95 மதிப்புள்ள பித்தளை பிளேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் பாலாஜி மீது ஏற்கனவே திருட்டு, வழிப்பறி உட்பட 12 குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மூவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%