தங்க பஸ்பத்தில் தீபாவளி இனிப்பு: ஒரு கிலோ விலை ரூ.1 லட்சத்து 11 ஆயிரம்

தங்க பஸ்பத்தில் தீபாவளி இனிப்பு: ஒரு கிலோ விலை ரூ.1 லட்சத்து 11 ஆயிரம்


ஜெய்ப்பூர்: ஜெய்ப்​பூர் கடை​யில் விற்​பனைக்கு வந்​துள்ள தீபாவளி இனிப்​பின் விலை ரூ.1.11 லட்​சம் எனத் தெரிய​வந்​துள்​ளது.


தீபாவளிப் பண்​டிகை என்​றாலே புத்​தாடை, பட்​டாசு, இனிப்​பு​கள்​தான் நினை​வுக்கு வரும். இந்​நிலை​யில் நாளை (அக்​டோபர் 20) தீபாவளிப் பண்​டிகை கொண்​டாடப்பட உள்ள நிலை​யில் ராஜஸ்​தான் மாநிலம் ஜெய்ப்​பூரில் உள்ள ஓர் இனிப்​புக் கடை​யில் வித்​தி​யாச​மான மற்​றும் விலை அதி​க​மான இனிப்​பு​கள் விற்​பனைக்கு வந்​துள்​ளன.


இந்த இனிப்​பு​களின் விலை​யைக் கேட்​டாலே நமக்கு மயக்​கம் வரு​கிறது. ஓர் இனிப்​புக்கு ஸ்வர்ண பஸ்மா (தங்க பஸ்​பம்) என்று பெயரிடப்​பட்​டுள்​ளது. 24 கேரட் எடையி​லான உண்​ணக்​கூடிய தங்​கத்​தால் நிரப்​பப்​பட்ட இந்த இனிப்பு ஸ்வர்ண பிர​சாதம் என்​றும் அழைக்​கப்​படு​கிறது.


‘ஸ்​வர்ண பிர​சாதம்' இனிப்பு ஒரு கிலோ ரூ.1,11,000 என்ற விலை​யில் விற்​பனை செய்​யப்​படு​கிறது. மேலும் அந்த இனிப்​புக் கடை​யில் விலை உயர்ந்த இனிப்பு வகைகளும் விற்​பனை செய்​யப்​படு​கின்​றன.


மிக​வும் அழகான பெட்​டி​யில் வைத்து விற்​பனை செய்​யப்​படும் இதை வாங்​கு​வதற்கு பலரும் ஆர்​வ​மாக உள்​ளனர். இதுதொடர்​பான வீடியோ சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி வைரலாகி வரு​கிறது. இதுகுறித்து கடை​யின் உரிமை​யாள​ரான அஞ்​சலி ஜெயின் கூறும்​போது, “இந்த ஸ்வர்ணா பஸ்​மாவுக்கு தற்​போது அதிக அளவில் கிராக்கி ஏற்​பட்​டுள்​ளது. நகை​யைப் போன்ற தோற்​றத்​தில் இந்த இனிப்பு உரு​வாக்​கப்​பட்டு நகைப்​பெட்டி மாடலில் உள்ள பெட்​டி​யில் வைத்து தரு​கிறோம்.


தனி​யாக ஒரு ஸ்வர்ண பஸ்மா வாங்​கி​னால் அதன் விலை ரூ.3 ஆயிரம். கிலோ​வாக வாங்​கி​னால் ரூ.1.11 லட்​ச​மாகும். இந்த ஸ்வர்ண பஸ்மா என்​பது ஆயுர்​வேத மருந்து போன்​றது. நமது உடலில் எதிர்ப்​புச் சக்​தியை அதி​கரிக்​கும். உடலுக்கு எந்​த​விதக் கெடு​தலும் வராது. ஆரோக்​கி​யத்​தைக் காக்​கும்.


இதுத​விர வேறு சில விலை உயர்ந்த இனிப்பு வகைகளை​யும் விற்​பனை செய்​கிறோம். ஸ்வர்ண பஸ்மா பாரத் இனிப்பு ஒரு கிலோ ரூ.85 ஆயிரத்​துக்​கும், சண்டி பஸ்மா பாரத் ரூ.58 ஆயிரத்​துக்​கும்​ விற்​பனை செய்​கிறோம்​” என்​றார்​.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%