இன்றைய தமிழ்நாடு இ பேப்பரில் நலம் தரும் மருத்துவ பகுதியில் துளசி கற்பூரவள்ளி இலைகளின் மகத்துவத்தை அழகாய் சொல்லும் விதமாக கட்டுரை அமைத்திருந்தது வெகு சிறப்பு. சிவ.முத்துலட்சுமணன் அவர்கள் எழுதிய திருவிளையாடல் புராணம் ஒவ்வொரு வாரமும் சிவபெருமானுடைய லீலைகளை வாசகர்களுக்கு சொல்லி நல்ல ஆன்மீகத்தை வளர்க்கின்ற பகுதியாக உள்ளது. "கம்பி கட்டுன கதை" படத்தின் விமர்சனம் படத்தின் தரத்தை நன்கு அலசி ஆராய்ந்து நடுநிலையோடு எழுதப்பட்டிருந்தது. இரண்டு பக்க புதுக்கவிதைகள் பக்கம் பல புத்தம் புதிய கவிஞர்களை உருவாக்கும் பகுதியாக உருவாகி வருகிறது என்பதில் சந்தேகமே இல்லை. பல்சுவை களஞ்சியம் பகுதியில் கற்பூரவள்ளி இலை, பணங்கற்கண்டு இரண்டின் மருத்துவ குணங்களை சொல்லும் விதமாக அமைந்திருந்தது சிறப்பு. இன்றைய நாளிதழில் பன்முகம் பகுதி உடல் ஆரோக்கியத்திற்கான தகவலை சொல்லும் விதமாக அமைந்திருந்தது பாராட்டுக்குரியது.

Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?