வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) 21.10.25

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) 21.10.25


அன்புடையீர்,


 வணக்கம். 20.10.25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர். காம் முதல் பக்கத்தில் தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களுடன் அரசியல் செய்திகளையும் பஞ்சாங்கத்தையும் படித்து தீபாவளியை இனிமையாக கொண்டாடினேன்.


அடுத்து திருக்குறளை அதன் பொருளை புரிந்து கொண்டு படித்து மகிழ்ந்தேன். அந்த பக்கத்தில் வந்த ஆன்மீக செய்திகள் அருண் தவம் செய்தாலும் கிடைக்காத நல்ல செய்திகளாக அருமையுடன் படித்து மகிழ்ந்தேன்.


நலம் தரும் மருத்துவம் பகுதி இல்லை என்று இயற்கை மூலிகைகளான தேனான துளசி கற்பூரவள்ளி சர்ப்பத்தை கலந்து குடித்து ஆரோக்கியமாக வாழ அருமையான ரெசிபி சொன்னதற்கு பாராட்டுக்கள்.


ராசிபுரத்தில் திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி முகாம் என்ற செய்தியும், தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் கொகினேனி ரங்க நாயகலு அவர்களின் வரலாறு மற்றும் புராண புகைப்படங்களும் மிகவும் அருமை பாராட்டுக்கள்.


பல்சுவை களஞ்சிய பகுதியில் பலதரப்பட்ட செய்திகளுடன் சிரிப்பதற்கு மீம்ஸ் அறிவை வளர்த்துக் கொள்வதற்கு விடுகதை நம்மை மறந்து சிரிப்பதற்கு ஜோக்ஸ் என ஒவ்வொரு தகவலும் மிகவும் அருமை பாராட்டுக்கள்.


பன்முகம் பக்கம் மிகவும் அருமை. அதில் வந்த சரியான முறையில் நடைபயிற்சி செய்வது எப்படி என்ற தகவல் படித்து பல தெரியாத செய்திகளை புரிந்து கொண்டேன். பாராட்டுக்கள்.


 16ஆம் பக்கத்தில் அனைத்து வண்ண படங்களும் ஆன்மிக செய்திகளும் அரசியல் நிகழ்வுகளும் அந்தந்த ஊர்களுக்கு சென்று நேரில் பார்ப்பது போல தெளிவான படங்களுடன் செய்திகளை பிரசூலிப்பது பாராட்டுக்குரியது .


சுற்றுலா பக்கத்தில் வந்த கொல்லி பாவையால் உருவான கொல்லிமலை ரகசியம் என்று அந்த கோவில் பற்றியும் அந்த கோவிலின் கதை பற்றியும் படித்ததும் மகிழ்ச்சியாக இருந்தது.


 தீபாவளி நேரம் என்பதால் பூக்களின் விலை மிக அதிரடியாக உயர்ந்தது என்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தாலும் நாள் கிழமைகளில் பூக்கள் வைத்துக் கொள்வது சிறந்தது தானே என்று மன அமைதி அடைந்தது.


தீபாவளி என்பதால் பலர் சொந்த ஊர்களுக்கு சென்று விட சென்னை சாலைகள் வெறிச் சோடியது என்ற படத்தை பார்த்ததும் எப்போதும் பரபரப்புடன் இருக்கும் சென்னையை என்னை மறந்து ரசித்துப் பார்த்தேன்.


பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் மோதல் ஏற்பட அதை முடிவுக்கு கொண்டு வந்ததால் சண்டை நிறுத்தம் அமல் செய்யப் பட்டது என்ற செய்தி மகிழ்ச்சியாக இருந்தது. உலகத்தில் எப்போது சண்டையெல்லாம் நிகழாமல் அமைதியுடன் இருக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்ய வைத்து செய்தி.


அரசியல் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்று பாலஸ்தீனத்தில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது வைக்கப்பட்ட செய்தியை படித்ததும் அயல்நாடுகளுக்கு சென்று அங்கு நடப்பதை பார்ப்பது போல ஒரு உணர்வு வந்தது.


 அனைத்து பக்கங்களிலும் தித்திக்கும் தீபாவளியை இனிப்புடன் சந்தோஷத்துடன் கொண்டாட அழகான செய்திகளை மிக அருமையாக தொகுத்து கொடுத்த தமிழ் நாடு இ பேப்பரான் ஆசிரியர் குழுமத்திற்கு தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும்.


 நன்றி

உஷா முத்துராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%