
பீஜிங்,
இன்றைய இளையதலைமுறையினர், கடைக்கு சென்று பொருட்களை வாங்குவதைவிட ஆன்லைனில் விதவிதமான பொருட்களை வாங்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இளம்பெண்கள், சிறுவர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதை காட்டியிருக்கிறது ஒரு சீன மூதாட்டியின் ஆன்லைன் ஷாப்பிங் பட்டியல்.
சீனாவின் ஜியாடிங் பகுதியை சேர்ந்த வாங் என்ற 66 வயது பெண்மணி, தனியாக வசித்து வருகிறார். அவர் ஆன்லைனில் ஷாப்பிங் செய்து தனது பொழுதை கழிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். அவர் ஒரே ஆண்டில் ரூ.2.4 கோடிக்கு ஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்கிக் குவித்து உள்ளது அனைவரையும் வியக்க வைத்து உள்ளது. வீட்டில் எங்கு பார்த்தாலும் ஆன்லைனில் வாங்கப்பட்ட பொட்டலங்கள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன.
ஏராளமான பொட்டலங்கள் பிரித்து பார்க்கப்படாமலே உள்ளது. அப்படி பிரிக்கப்படாத பொருட்களுக்களை வைப்பதற்காக மற்றொரு வீட்டையும் வாடகைக்கு எடுத்து, வாங்கிய பொருட்களை குவித்து வைத்திருக்கிறார். பொட்டலங்கள் அடைந்து வைத்திருப்பதால் தங்கள் வீடுகளில் பூச்சித் தொல்லைகள் அதிகரித்து இருப்பதாகவும், சில பொருட்களில் இருந்து கெட்ட வாசனை வீசுவதாகவும் புகார்கள் தெரிவித்து வருகிறார்கள் அண்டை வீட்டார். இருந்தபோதிலும் பாட்டி பொருட்களை வாங்கிக் குவிப்பதை நிறுத்தவில்லை. பாட்டி குறித்த தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?