ரூ.38 கோடியில் இந்தியாவிலேயே முதல் முறையாக ஏர்சஸ்பென்ஷன் வசதியுடன் 61 அதிநவீன புதிய பேருந்துகள்:

ரூ.38 கோடியில் இந்தியாவிலேயே முதல் முறையாக ஏர்சஸ்பென்ஷன் வசதியுடன் 61 அதிநவீன புதிய பேருந்துகள்:



உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்


* இருக்கை, படுக்கைக்கு தனித்தனியாக சார்ஜிங் போர்டுகள்


* அபாய ஒலி எழுப்பி, ஒலிபெருக்கி, டிஜிட்டல் கடிகாரம்


சென்னை, ஜன. 6–


சென்னை தீவுத்திடலில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 37.98 கோடி ரூபாய் மதிப்பிலான இருக்கை மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய 61 அதிநவீன புதிய பேருந்துகளின் இயக்கத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


முதலமைச்சரின் உத்தரவின்படி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட 110 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக பயணிக்கும் வகையில் கீழ்கண்ட சிறப்பு அம்சங்கள் செய்யப்பட்டு உள்ளன.


இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில், பயணிகளின் சொகுசு பயணத்திற்காக முன்புற ஏர் சஸ்பென்சன் வசதி செய்யப்பட்டுள்ளது. படுக்கை வசதியானது அதிகரிக்கப்பட்ட இடத்துடன் மற்றும் இரண்டு படுக்கைகளுக்கு இடையே தடுப்பு வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு படுக்கைக்கும் தனித்தனியாக மின்விசிறி பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு இருக்கை மற்றும் படுக்கைக்கும் தனித்தனியாக சார்ஜிங் போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளது.


அபாய ஒலி எழுப்பி


மேலும் பயணிகளின் பாதுகாப்பிற்காக ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் அபாய ஒலி எழுப்பி (SOS) அமைக்கப்பட்டுள்ளது. நடத்துனர் பயணிகளுக்கு தகவல்களை அறிவிப்பதற்காக ஒலி பெருக்கி, டிஜிட்டல் கடிகராம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. பயணிகளின் சுமை பெட்டி மற்றும் சரக்கு பார்சலுக்காக போதிய இடவசதியுடன் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.


புதிய பேருந்துகளின் என்ஜின் அரசு நிர்ணயம் செய்த அளவுகளின் அடிப்படையில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், மேம்படுத்தப்பட்ட பிரேக்கிங் செயல் திறனுக்காக நவீன எலக்ட்ரானிக் மேக்னடிக் ரிடார்டர் (EMR) நிறுவப்பட்டுள்ளது. இன்ஜின் தீயை முன் கூட்டியே திறம்பட அனுமானிக்கும் தீ கட்டுபாட்டு அமைப்பு (FDSS) கருவி பொருத்தப்பட்டுள்ளது.


இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சா.சி.சிவசங்கர், பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, துணைமேயர் மு.மகேஷ்குமார், போக்குவரத்துத் துறை அரசு முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இரா.மோகன், மாநகர போக்குவரத்து கழக இணை மேலாண் இயக்குநர் இரா.சுந்தரபாண்டியன், உயர் அலுவலர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%