ரூ.824 கோடி மதிப்பிலான ஆயுதங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல்

ரூ.824 கோடி மதிப்பிலான ஆயுதங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல்


 

புதுடெல்லி: ரூ.824 கோடி மதிப்பிலான ஆயுதங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்​கா​வின் பாது​காப்பு ஒத்​துழைப்பு அமைப்பு (டிஎஸ்​சிஏ) நேற்று முன்​தினம் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: மொத்​தம் ரூ.824 கோடி மதிப்​பிலான வெளி​நாட்டு (இந்​தி​யா) ஆயுத விற்​பனை தொடர்​பான 2 திட்​டங்​களுக்கு வெளி​யுறவுத் துறை ஒப்​புதல் அளித்​துள்​ளது.


இதில், ரூ.418 கோடி மதிப்​பிலான எக்​ஸ்​காலிபர் ஏவு​கணை மற்​றும் ரூ.406 கோடி மதிப்​பிலான ஈட்டி ஏவு​கணை அமைப்பு ஆகியவை அடங்​கும். இது அமெரிக்​கா​வின் வெளி​நாட்​டுக் கொள்கை மற்​றும் தேசிய பாது​காப்பு இலக்​கு​களை ஆதரிக்​கும்.


மேலும் அமெரிக்​கா, இந்​தியா இடையி​லான ராஜதந்​திர உறவை வலுப்​படுத்​த​வும் இது உதவும். மேலும் இந்​தோ-பசிபிக் மற்​றும் தெற்கு ஆசிய பிராந்​தி​யத்​தில் அரசி​யல் நிலைத்​தன்​மை, அமை​தி, பொருளா​தார முன்​னேற்​றத்​துக்​கான முக்​கிய சக்​தி​யாக திகழும் ஒரு முக்​கிய கூட்​டாளி​யின் (இந்​தி​யா) பாது​காப்பை மேம்​படுத்​த​வும் உதவும்.


இந்​திய பாது​காப்​புத் துறைக்கு இது மிகப்​பெரிய ஊக்​க​மாக இருக்​கும். குறிப்​பாக, துல்​லிய​மான தாக்​குதல் திறன் கொண்ட உபகரணங்​களை வழங்​கு​வதன் மூலம் இந்​தி​யா​வின் தற்​போதைய மற்​றும் எதிர்​கால பிராந்​திய அச்​சுறுத்​தல்​களை எதிர்​கொள்​ளும் திறன் மேம்​படும்.


மேலும் இந்​தி​யா​வின் உள்​நாட்டு பாது​காப்பை வலுப்​படுத்​த​வும் இது உதவும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது. இந்​திய பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் கடந்த அக்​டோபர் 31-ம் தேதி மலேசி​யா​வின் கோலாலம்​பூரில் அமெரிக்க பாது​காப்பு அமைச்​சர் பீட் ஹெக்​செத்தை சந்​தித்​தார்.


அப்​போது இரு நாடு​களுக்கு இடையி​லான பாது​காப்பு உறவை மேலும் பலப்​படுத்​து​வது தொடர்​பான 10 ஆண்டு ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. இதன் தொடர்ச்​சி​யாக ரூ.824 கோடி மதிப்​பிலான ஆயுதங்​களை இந்​தி​யாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் வழங்கி உள்ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%