லடாக்கில் உள்ள காந்தமலையைப் பற்றி தெரியுமா?

லடாக்கில் உள்ள காந்தமலையைப் பற்றி தெரியுமா?


 

இந்தியா பல மர்மங்களுக்கும், அதிசயங்களுக்கும் பேர் போன நாடாகும். இங்கே புரிந்து கொள்ள முடியாத பல அதிசயங்கள் மக்களை எப்போதும் ஆச்சர்யப்படுத்தி கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் இருக்கும் இன்னொரு அதிசயம்தான், காந்தமலை.


ஆம். காந்தமலையேதான்! இந்தியாவில் லடாக்கில் உள்ள லேயில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த காந்தமலை.


லடாக் சாகச விரும்பிகளுக்கும், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகும். அங்கே உள்ள இந்த காந்தமலையை பார்வையிடவும் பலர் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த இடத்தில் மஞ்சள் பலகையில், இது புவியீர்ப்பு விசையை மீறும் இடம் என்று எழுதப்பட்டுள்ளது.


அங்கே சாலையில் வரையப்பட்டிருக்கும் வெள்ளை பெட்டிக்குள் வண்டியை எடுத்து சென்று நிறுத்தினால், நிறுத்தப்பட்டிருக்கும் வண்டி 20கிலோ மீட்டர் வேகத்தில் ஓடத்தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


காந்த மலை லே-கார்கில்-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இதன் கிழக்கிலே சிந்து நதி ஓடுகிறது. அதனால் இவ்விடம் புகைப்பட விரும்பிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்.


இவ்விடத்தில் இருக்கும் ஆப்டிக்கல் இல்லுசன், கீழ்நோக்கி செல்லும் மலைச்சரிவை மேல் நோக்கி செல்வது போல காட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த காந்தமலை தகுதியான மக்களை மட்டும் சொர்க்கத்திற்கு கூட்டி செல்வதாகவும், மற்றவர்களுக்கு இங்கே வந்தால் எந்த உணர்வும் ஏற்படுவதில்லை என்பது இங்கிருந்த மக்களின் நம்பிக்கையாக இருந்தது.


இந்த காந்தமலை 14,000 அடி உயரத்தைக் கொண்டது. இந்த இடத்தை மக்கள் ஒரு சுவாரசியமான சுற்றுலா தளமாக கருதுகிறார்கள்.


அறிவியலின்படி பார்க்கையில், இந்த மலை மிகவும் அதிகமான காந்த சக்தியை வெளிப்படுத்துவதாகவும் அதனால்தான் புவியீர்ப்பையும் மீறி வாகனங்களை தன்பால் இழுக்கிறது என்று கூறுகிறார்கள். இவ்விடத்தை சுற்றிப்பார்க்க வருவதற்கு சிறந்த மாதம், மே முதல் செப்டெம்பர் வரையில். அப்போது சாலைகள் கூட்டமின்றி காணப்படுவதால் எளிதில் இவ்விடத்தை அடைவதற்கு வசதியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்தியாவில் மட்டுமே இது போன்ற காந்தமலைகள் கிடையாது. உலகில் பல இடங்களில் இருக்கிறது. உதாரணத்திற்கு எலக்ரிக் பிரே ஸ்காட்லாந்த், கன்சூ சீனா, துலசிஷ்யம் குஜராத் போன்ற இடங்களிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


என்னதான் அதிசயமும் ஆச்சர்யமும் நிறைந்த இடமாக இருந்தாலும், இந்தியாவில் இது ஒரு பிரபலமான சுற்றுலா தளமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சாகச விரும்பிகளும், வாகன ஓட்டிகளுக்கும் மிகவும் பிடித்தமான இடமாக லடாக் எப்போதும் திகழ்கிறது என்பதில் ஐயமேதுமில்லை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%