வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்பே திணறும் விழுப்புரம் மாவட்டம்

வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்பே திணறும் விழுப்புரம் மாவட்டம்


விழுப்புரம், அக். 6- விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி நிர்வாகங்கள் திணறி வருகின்றன. இவற்றை எல்லாம் கண்காணிப்பு செய்து நிர்வாகம் நடத்தும் மாவட்ட நிர்வா கம் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கூட்டம் நடத்தி, கடுமையான எச்சரிக்கை விடுத்து வருகிறது. ஆனாலும் அடிப்படை, அத்தியாவசிய, சுகாதார பணிகள் சுணக்கமாக நடப்பதால் தீர்வு இல்லாமல் பிரச்சனைகள் நீடித்து நிலைத்து தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பது சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டு கிறார்கள். கடந்த பெஞ்சல் புயல் சாய்த்தவைக ளையே இன்னும் சரிசெய்ய முடியாமல் சம்பந்தப்பட்ட துறைகள் மாவட்டத்தில் திணறி வருகின்றன. இந்நிலையில், பருவ மழை தொடங்க உள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் என்ன செய்ய போகிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது. தாழ்வான வரத்து வாய்க்கால்கள், மேடு கள், தண்ணீர் தேங்கும் இடங்கள், ஆறு, குளம், ஏரி ஆகியவற்றின் கரையோரப் பகுதி களில் குடியிருப்போர் மற்றும் ஏரி, குளம், ஆறு ஆகியவற்றின் கரைகள், வரத்து வாய்க்கால்கள் குறித்து விவசாயிகள் ஆகி யோர் பெரும் கவலையடைந்து வருகின்ற னர். இதுவரை மாவட்டத்தில் உள்ள பல ஏரி, ஆறு, குளம் ஆகியவற்றின் தண்ணீர் போக்கு வரத்து வாய்க்கால்கள் சரிசெய்யப் படாமல் இருப்பது குறித்து சமூக ஆர்வ லர்கள் பயத்துடன் கூடிய ஆதங்கம் தெரி வித்து வருகின்றனர். இந்நிலையில் தான் வெள்ளிக்கிழமை (அக்.3) இரவு பெய்த திடீர் மழையால் விக்கிர வாண்டி வட்டம், பனையபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை (அக்.4) நலம் காக்கும் மருத்துவ முகாம் நடை பெற்றது. பள்ளி வளாக முகப்பு மற்றும் உள் பகுதி மழைநீர் தேங்கி சுகாதாரத் துறைக்கே சவால் விடுவது போல் இருந்த தால், செய்வதறியாமல் முகாம் நடத்தும் அதி காரிகள் திணறினர். மழை பெய்தாலே இப்பகுதியில் மழை நீர் தொடர்ந்து தேங்கி வருவது வாடிக்கை யாக உள்ளது. இதனை இனிவரும் காலத்தில் மாணவ மாணவிகள் பாதிக்கப்படாத வகை யில் நிரந்தரமாக தேங்கும் மழைநீரை வெளி யேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வரு கின்றனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%