வண்டலூர் உட்பட 4 உயிரியல் பூங்காக்களின் மேம்பாட்டுக்கு ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒப்புதல்

வண்டலூர் உட்பட 4 உயிரியல் பூங்காக்களின் மேம்பாட்டுக்கு ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒப்புதல்


சென்னை, அக்.7–


முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு வன உயிரின ஆணையத்தின் 22-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள 4 உயிரியல் பூங்காக்களின் விரிவான மேம்பாட்டுக்காக 35 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டது.


இக்கூட்டத்தில், முதலமைச்சர், 4 உயிரியல் பூங்காக்களின் அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்துதல், விலங்குகளின் நலனை மேம்படுத்துதல் மற்றும் பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்துதல் தொடர்பான தற்போதைய முயற்சிகள் மற்றும் புதிய திட்டங்களை ஆய்வு செய்தார்.


வண்டலூர் - அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, கிண்டி - சிறுவர் இயற்கைப் பூங்கா, சேலம் - குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, வேலூர் - அமிர்தி உயிரியல் பூங்கா ஆகிய பூங்காங்களின் மேம்பாட்டிற்காக 35 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஒப்புதல் வழங்கினார். இக்கூட்டத்தில், உயிரியல் பூங்கா நிர்வாகத்தின் தரத்தை உயர்த்திடவும், விலங்குகளின் நலனை உறுதி செய்திடவும், பொதுமக்களிடம் வன விலங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.


இக்கூட்டத்தில், வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, நிதித்துறை முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன், சுற்றுச்சுழல் துறை இயக்குநர் ஏ.ஆர். ராகுல்நாத், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, தலைமை வன உயிரின காப்பாளர் ராகேஷ் குமார் டோக்ரா, வனத்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%