வந்தவாசி ஊராட்சி பள்ளியில் பயிலும் 8 இரட்டையர் மாணவர்களுக்கு பரிசுகள்
Nov 11 2025
10
வந்தவாசி, நவ 12:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் தேசிய கல்வி தின சிறப்பு உரையரங்கம் மற்றும் இரட்டையர் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வு ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியை ஆ.சித்ரா தலைமை தாங்கினார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் முன்னிலை வகித்தார். பள்ளி ஆசிரியை கண்மணி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, வந்தவாசி தீயணைப்பு நிலைய அலுவலர் மு.பிரபாகரன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். தேசிய கல்வி தினம் டாக்டர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்தநாளை நினைவுக்கூறும் வகையில் தேசிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. கல்வியே வாழ்க்கையின் திறவுகோல் ஆகும். எனவே அனைத்து மாணவர்களும் நல்ல முறையில் படித்து வாழ்க்கையின் உச்ச நிலையை தொட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் இப்பள்ளியில் பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற 8 இரட்டையர்களுக்கு புத்தகங்கள் மற்றும் எழுது பொருள்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் சமூக ஆர்வலர் முகமது ஜியா, பள்ளி எஸ்எம்சி ஆசிரியைகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பா. சீனிவாசன், வந்தவாசி.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?