மயிலாடுதுறை , நவ , 12 -
அ.தி.மு.க. பிரமுகர் வழுவூர் ஜி.கலியமூர்த்தி அவர்களின் 35 - ஆம் ஆண்டு குருபூஜை விழா திங்கட்கிழமை காலை 9.00 மணிக்குமேல் மயிலாடுதுறை அருகே உள்ள வழுவூர், வளையாம்பட்டினம் இதய தெய்வம் வி.ஜி.கே. நினைவு மண்டபத்தில் நடைப்பெற்றது.
குரு பூஜையை முன்னிட்டு அபிஷே ஆராதனையும் , அன்னதானமும் நடைபெற்றது.முன்னாள் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன் , காமராஜ் , மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளர் பவுன்ராஜ் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் கலந்து கொண்டார்கள்.
விழா ஏற்பாடுகளை வளையாம்பட்டினம், வழுவூர் வி.ஜி கே. குடும்பத்தினர்கள், அ.இ.அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட கழக செயலாளர் வி.ஜி.கே.செந்தில்நாதன் , வி.ஜி.கே.மணிகண்டன், வி.ஜி.கே. நெடுமாறன் செய்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?