வரம்

வரம்


பல வருட போராட்டம் -பல வருட பிராத்தனை மற்றும் பல லட்ச ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை செய்து பல இன்னல்களுக்கு பிறகு சாந்தி -சரவணன் தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது ...

குழந்தை பிறந்த இரண்டு நாட்களிலேயே சாந்திக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்க பட்டாள் .அவளுக்கு பல மருத்துவ பரிசோதனைகள் செய்ய பட்டன .டெஸ்ட் முடிவில் சாந்திக்கு கோடியில் ஒருத்தருக்கு வரக்கூடிய ஹைப்பர் லேக்டேஷன் என்ற அபூர்வமான நோய் வந்திருப்பது தெரிய வந்தது ..

இந்த நோய் வந்தவர்களுக்கு மார்பகத்தில் அளவுக்கு அதிகமாய் பால் சுரக்கும் தோராயமாக ஒரு நாளைக்கு நான்கு லிட்டர் முதல் ஆறு லிட்டர் வரை பால் சுரக்கும் சுரக்கின்ற பாலை வெளியேற்றம் செய்யாவிட்டால் நெஞ்சு வலி நிச்சயம் என்று மருத்துவர் கூறி விட்டார் அதை கேட்டு சாந்தி வருத்தப்படுவதற்கு பதிலாக சந்தோஷப்பட்டாள் அவள் முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி ,அவள் உதட்டில் அழகாய் புன்னகையெல்லாம் பூத்தது ,சோகமான விஷயத்தை சொல்லியிருக்கிறோம் ஆனால் இவள் இப்படி சந்தோசப்படுகிறாளே என ஆச்சரியப்பட்டார்கள் மருத்துவர்கள் ..

வேறு வழியின்றி மருத்துவர்கள் அவளிடமே கேட்டனர் ,ஏம்மா உனக்கு ஹைப்பர் லேக்டேஷன்-னு ஒரு வியாதி வந்திருக்குன்னு சொல்லியும் ஏன் சந்தோசப் படுற ?

டாக்டர் நான் குழந்தையா இருக்கும் போதே எங்கம்மாவுக்கு மார்பக புற்று நோய் வந்து எங்கம்மாவோட ரெண்டு மார்பகத்தையும் எடுத்திட்டாங்க ,நான் குழந்தைல வைட்டமின் குறைபாட்டோட இருந்ததாலே கட்டாயம் தாய்ப்பால் கொடுக்கணும்னு டாக்டர்ங்க சொல்லிட்டாங்க எனக்கு குழந்தைல தாய்ப்பால் கொடுக்க முடியாம எங்கம்மா பட்ட வலி ,வேதனை எனக்கு நல்லாவே தெரியும் எனக்கு தாய்ப்பால் கொடுத்தது எங்க வீட்ல வேலைபார்க்குற அம்மா தான் அவங்க தாய்ப்பால் தரலைன்னா நான் இன்னைக்கு உயிரோடவே இருந்திருக்க முடியாது

என் ஒரு குழந்தைக்கு ஐந்து ,ஆறு லிட்டர் தாய் பாலெல்லாம் தேவை படாது அதனாலே மெடிக்கல் பம்பிங் மெஷின் மூலமா என் தாய்ப்பாலை எடுத்து தாய்ப்பால் தேவைப்படும் குழந்தைக்கு கொடுக்கலாம் இல்லையா ?எங்க அம்மா போல இந்த உலகத்துல சில பேர் பாதிக்க பட்டிருக்கலாம் அவங்க குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் அவங்க படுற வலியை என் தாய்ப்பால் மூலமா கொஞ்சம் நிவர்த்தி பண்ணலாம் இல்லையா ,அதனாலே தான் சந்தோஷப்பட்டேன் என்றாள் சாந்தி ..

இக்கட்டான சூழ்நிலையிலும் தன் மனைவி சாந்தியின் உயர்ந்த நோக்கம் கண்டு மெய்சிலிர்த்து போனான் சரவணன் .


-லி.நௌஷாத் கான்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%