வர்த்தக உரிமையை பாதுகாக்க பிரிக்ஸ் நாடுகள் ஒன்றிணைய வேண்டும் : ஜி ஜின்பிங் அழைப்பு
Sep 13 2025
40

பெய்ஜிங்,செப்.11-
உலகளவில் உருவாகி வரும் பல்வேறு சவால் களுக்கு இடையில் அனைத்து நாடுகளின் வர்த்தக உரிமையை பாதுகாக்கவும் பன்முகத் தன்மையை நிலைநாட்டவும் பிரிக்ஸ் கூட்டமைப் பில் உள்ள நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அழைப்பு விடுத் துள்ளார். காணொலி வாயிலாக நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் இந்த அழைப்பை அவர் விடுத்துள்ளார். வளரும் நாடுகளாக உள்ள தெற்குலக நாடுக ளின் சர்வதேச பொருளாதார பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு ஆதரவான சக்தியாக பிரிக்ஸ் கூட்டமைப்பு விளங்கி வருகிறது. இந்நிலையில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் அங்கம் வகித்து வரும் நாடு கள் கூட்டமைப்பின் கொள்கைகளாக உள்ள வெளிப்படைத்தன்மை, அனைத்து நாடுகளை யும் உள்ளடக்கிய பயணம், இருதரப்பும் வெற்றி பெறுவதற்கான ஒத்துழைப்பு ஆகியவற்றை முன் னெடுத்து, பன்முகத்தன்மை மற்றும் பன்னாட்டு வர்த்தக அமைப்பைக் கூட்டாக இணைந்து பாது காக்க வேண்டும். இதன் மூலம் பிரிக்ஸ் கூட்ட மைப்புடனான ஒத்துழைப்பை மேலும் மேம் படுத்தி மனிதகுலத்தின் பொதுவான எதிர்கா லத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என்று ஜி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார். பிரிக்ஸ் கூட்டமைப்பானது ஏகாதிபத்திய எதிர்ப்பு அமைப்பு அல்ல, மாறாக ஆரோக்கி யமான பொருளாதார கூட்டமைப்பாக உள்ளது. குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளின் ஒற்றுமை மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான ஒரு முக்கியமான தளமாக இந்த கூட்டமைப்பு உள்ளது. அமெரிக்கா தலைமையில் பாதுகாப்புவாதம் என்ற பெயரில் வளரும் நாடுகளின் மீது அதிக தடை களை விதிக்கும் போக்கு அதிகரித்து வரும் நிலை யில், பிரிக்ஸ் கூட்டமைப்பு வளரும் நாடுகளுக்கு ஒத்துழைப்பை கொடுத்து பன்முகத்தன்மையைக் கூட்டாகப் பாதுகாத்து சர்வதேசச் சட்டத்தின் அடிப்ப டையில் பொதுவான வளர்ச்சியை ஊக்குவித்து, சர்வதேசப் பிரச்சனைகளில் ஆக்கப்பூர்வமான மற்றும் நிலையான சக்தியாகப் விளங்கி வருகின்றது. அமெரிக்காவின் வர்த்தகப் போர் தீவிரம டைந்துள்ள நிலையில் பிரிக்ஸ் அமைப்பிற்குள் ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது. இது வளரும் நாடுகளின் பொருளாதாரப் பாதுகாப்பிற்கு மிக முக்கியமான நடவடிக்கை எனவும் இந்த ஒத்து ழைப்பு அதிகரிப்பிற்கு சீனாவின் தலைமைப் பண்பு பெரிதும் பங்களிக்கிறது எனவும் சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?