வலங்கைமானில் அதிமுக சார்பில் பாரதரத்னா எம் ஜி ஆர் அவர்களின் 38- வது நினைவு தினத்தை முன்னிட்டு அமைதி ஊர்வலம்
Dec 24 2025
15
வலங்கைமானில் அதிமுக சார்பில் பாரதரத்னா எம் ஜி ஆர் அவர்களின் 38- வது நினைவு தினத்தை முன்னிட்டு அமைதி ஊர்வலம், அன்னாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, உறுதிமொழி ஏற்பு, அன்னதானம் வழங்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றிய, நகர அதிமுக சார்பில் பாரதரத்னா எம் ஜி ஆர் அவர்களின் 38-வது நினைவு தினத்தை முன்னிட்டு வரதராஜன்பேட்டை மகா மாரியம்மன் ஆலயம் அருகில் இருந்து வலங்கைமான் மேற்கு ஒன்றிய செயலாளர் குமாரமங்கலம் கே.சங்கர், கிழக்கு ஒன்றிய செயலாளர் யூ.இளவரசன் ஆகியோர் தலைமையில் நகர செயலாளர் சா.குணசேகரன் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் அமைதி ஊர்வலம் புறப்பட்டு குடந்தை ரோடு, காளியம்மன் கோவில், கடைவீதி வழியாக இராமர் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர், அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ஆலங்குடி ராணி துரைராஜ், மாவட்ட அமைப்பு சாரா ஒட்டுநர் அணி செயலாளரும், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவருமான மாஸ்டர் எஸ். ஜெயபால், மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் ஆர்.ஜி.பாலா, மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் ஜெய.இளங்கோவன், மாவட்ட பிரதிநிதி மூர்த்தி, தொழவூர் முனுசாமி, ஹாஜா மைதீன், முன்னாள் நகர அவைத் தலைவர் ஆறுமுகம், நகர அவைத் தலைவர் ரத்னகுமார், நகர பொருளாளர் எஸ்.அருள்முருகன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் விடையல் சங்கர், தென்குவளவேலி பாலதண்டயுதபாணி, கிழக்கு ஒன்றிய அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் சிவசங்கரவேலன் உள்ளிட்ட கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?