வலங்கைமான் அருகே உள்ள ஆவூர் ஊராட்சியில் 7 கிராம ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்காவில் முன்னதாக பத்து முகாம்கள் நடைபெற்ற நிலையில் 11- வது இறுதி முகாமாக ஆவூர் ஊராட்சியில் ஆவூர், கோவிந்தகுடி, தெற்கு பட்டம், வீராணம், ஊத்துக்காடு, ஏரி வேலூர் மற்றும் களத்தூர் ஆகிய 7 ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, வீட்டுமனை பட்டா கோருதல் உள்ளிட்டவைகள் தொடர்பாக 405 மனுக்கள் வரப்பட்டன. இதில் ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் செந்தமிழ் செல்வன், வலங்கைமான் வட்டாட்சியர் ஓம் சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ரமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி முரளி, வலங்கைமான் திமுக ஒன்றிய செயலாளர்கள் வீ.அன்பரசன், நரசிங்க மங்கலம் கோ. தெட்சிணாமூர்த்தி, நகர செயலாளர் பா.சிவநேசன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர். வலங்கைமான் ஒன்றியத்தில் 11 உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் 50 கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைப்பெற்றுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?