வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கமம் நிகழ்வு நடைபெற்றது, கால்நூற்றாண்டை கடந்து சந்தித்து நெகிழ்ச்சி.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2000-2001 ம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சங்கமம் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மு.நாவளவன் தலைமை வகித்தார், சிறப்பு விருந்தினராக கணினி அறிவியல் ஆசிரியர் சிவசண்முகம், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் க.செல்வம், முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எஸ்.மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு முன்னாள் மாணவர்களை கவுரவப்படுத்தினர். கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பிரிந்திருந்த சுமார் 75 முன்னாள் மாணவர்கள், தங்கள் குடும்பத்துடன் சேர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்நிகழ்ச்சியில் மீண்டும் இணைந்து பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு நெகிழ்ந்தனர். இந்தச் சங்கத்தின் ஒரு பகுதியாக, ஓமனில் பணிபுரியும் முன்னாள் மாணவர் சதீஷ், அங்குள்ள ஓமன் தமிழ்ச் சங்கத்தின் கவிதைப் போட்டியில் 2 ம் பரிசு வென்றதை முன்னிட்டு, அவரை பள்ளி நண்பர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கெளரவப்படுத்தி நினைவுப் பரிசை வழங்கி பாராட்டினர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?