வலங்கைமான் அருகே உள்ள கண்டியூர் ஊராட்சியில் ஜந்து கிராம ஊராட்சிகளுக்கு நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 500 க்கும் மேற்பட்ட மனுக்கள்

வலங்கைமான் அருகே உள்ள கண்டியூர் ஊராட்சியில் ஜந்து கிராம ஊராட்சிகளுக்கு நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 500 க்கும் மேற்பட்ட மனுக்கள்

வலங்கைமான் அருகே உள்ள கண்டியூர் ஊராட்சியில் ஜந்து கிராம ஊராட்சிகளுக்கு நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 500 க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.


திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்கா கண்டியூர் ஊராட்சியில் நரசிங்க மங்கலம் பகுதியில் மேலவிடையல், கீழவிடையல், சித்தன்வாழுர், கண்டியூர், மாத்தூர் ஆகிய ஜந்து ஊராட்சிகளுக்கு நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக 100 மனுக்கள் உள்பட 500 க்கும் மேற்பட்ட மனுக்கள் வரபெற்றன. நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட தனித் துறை ஆட்சியர் தங்க.பிரபாகரன், வலங்கைமான் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வீ.அன்பரசன், கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நரசிங்க மங்கலம் கோ.தெட்சிணாமூர்த்தி, வலங்கைமான் வட்டாட்சியர் ஓம் சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமணி, முரளி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%