செய்யாறு வட்ட முத்தமிழ்ச் சங்கம், அரிமா சங்கம் சார்பில் ரத்ததான முகாம்:

செய்யாறு வட்ட முத்தமிழ்ச் சங்கம், அரிமா சங்கம் சார்பில் ரத்ததான முகாம்:


செய்யாறு செப்.28,


செய்யாறு வட்ட முத்தமிழ் சங்கம் செய்யாறு அரிமா சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நேற்று நடைபெற்றது.


திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பணிபுரியும் முனைவர் கு. கண்ணன் கல்விச் சேவையின் வெள்ளி விழா ஆண்டு முன்னிட்டு செய்யாறு வட்ட முத்தமிழ் சங்கம், செய்யாறு அரிமா சங்கம் ஆகிய மூன்று அமைப்புகள் சார்பில் ரத்ததான முகாம் தனியார் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு செய்யாறு வட்ட முத்தமிழ் சங்கத் தலைவர் எறும்பூர் கை. செல்வக்குமார் தலைமை தாங்கினார். பேராசிரியர் முனைவர் கு. கண்ணன் முன்னிலை வகித்தார். அரிமா சங்க மாவட்ட தலைவர் எம். சண்முகம் வரவேற்றார்.


செய்யாறு அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கி சார்பில் மருத்துவர் அஜய் தலைமையில் செவிலியர்கள் சுமதி, சங்கர் ,ஆய்வக உதவியாளர்கள் காட்டு ராஜா ,பிரகாஷ் ,கோமதி உள்ளிட்ட குழுவினர் தன்னார்வர்களிடம் ரத்தம் பெறும் பணியினை மேற்கொண்டனர்.


செய்யாறு வட்ட தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த செயலாளர் ம. பழனி, துணை தலைவர் விக்ரமாதித்தன், உள்ளிட்ட தன்னார்வலர்கள் 11 பேர் ரத்த தானம் வழங்கினர். செய்யாறு வட்ட தமிழ்ச் சங்கப் பொருளாளர் க. கோவேந்தன், துணைத் தலைவர் பி. எம். சதீஷ்குமார், எச்.முபாரக் மற்றும் கல்லூரி முன்னாள் மாணவர்கள் ,உள்ளிட்டோர் திரளாக நிகழ்வில் கலந்து கொண்டனர்.


முனைவர் கு. கண்ணன் வெள்ளி விழாவின் முன்னாள் மாணவர்கள் குழுவினர், சங்கத்தினர், தன்னார்வலர்களை வரவேற்று விருந்தோம்பல் பணியில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் வந்திருந்தவர்களுக்கு மதிய உணவும் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%