வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: ஆவின் பால் பாக்கெட்டுகளில் விழிப்புணர்வு வாசகம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: ஆவின் பால் பாக்கெட்டுகளில் விழிப்புணர்வு வாசகம்



ஆவின் பால் பாக்கெட்டுகளில் விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்டுள்ளது.

சென்னை,


தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) கடந்த 4-ந் தேதி தொடங்கியது. பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் இந்தப் பணிகள் நடைபெற்று வருவதால், ஆங்காங்கே விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.


இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆவின் பால் பாக்கெட்டுகளில் விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்டுள்ளது. அதாவது, "சேலம் மாவட்டம் வாக்காளர் பட்டியல் - சிறப்பு தீவிர திருத்தம் 2026: தங்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு தீவிரத் திருத்தம் 2026 கணக்கீட்டு படிவத்தினை தங்கள் பகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைத்துவிட்டீர்களா?" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் 1 லட்சம் வீடுகளுக்கு விரைவில் ஸ்மார்ட் குடிநீர் மீட்டர்கள்

சென்னை, நவ.22-


சென்னையில் 1 லட்சம் வீடுகளுக்கு ஸ்மார்ட் குடிநீர் மீட்டர்கள் பொருத்தும் பணி விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.


சென்னை நகர மக்களுக்கு பூண்டி, சோழவரம், புழல், தேர்வாய் கண்டிகை, செம்பரபாக்கம், வீராணம் ஆகிய ஏரிகளில் இருந்தும், மற்றும் கடல் நீரை குடிநீரை மாற்றும் திட்டத்தின் கீழ் என மொத்தம் தினமும் சுமார் 1,300 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த பணியினை சென்னை குடிநீர் வாரியம் செய்து வருகிறது. அதற்காக 8 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.


அதில் ஏரி நீரை சுத்திகரித்து வீடுகளுக்கு வழங்க ஆயிரம் லிட்டருக்கும் ரூ.8-ம், கடல் நீரை குடிநீராக்க 1,000 லிட்டருக்கு ரூ.47 வரையும் செலவாகிறது. ஆனால் பொதுமக்களிடம் வசூலிக்கப்படும் கட்டணம் நிலையான தொகை என்பதால், சாதாரண வீடுகள் மாதம் ரூ.105, அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.200 மட்டுமே கட்டணம் செலுத்துகின்றன.


இதனால், பலர் குடிநீரை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துகின்றனர். சில வீடுகளில் மோட்டார் சைக்கிள்கள், கார்கள் சுத்தம் செய்வது, செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது, நீச்சல் குளத்திற்கு நீர் நிரப்புவது போன்ற பணிகளுக்கும் பயன்படுத்துவதாக சென்னை குடிநீர் வாரியம் கூறுகிறது. எனவே குடிநீர் பயன்பாட்டிற்கு ஏற்றப்படி கட்டணம் நிர்ணயிக்க, சென்னை குடிநீர் வாரியம் குடிநீர் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்த முடிவு செய்தது. அதற்கான டெண்டர் விடும் பணிகள் கடந்த ஜூன் மாதம் தொடங்கி, தற்போது இறுதி கட்டத்தை எட்டி விட்டது.


முதல்கட்டமாக 1 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல் செய்யப்பட்டு வீட்டு இணைப்புகளில் பொருத்தப்படுகிறது. அதில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 2,400 சதுரடிக்கு மேல்பரப்பளவுள்ள வீடுகளுக்கும் மட்டும் நிறுவப்பட உள்ளன.


அதன்பிறகு மீதமுள்ள அனைத்து இணைப்புகளிலும் குடிநீர் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%